2002ல் இஸ்லாமியர்மீது நடத்தப்பட்ட படுகொலையில் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியின்,அவர் அரசாங்கத்தின்பாத்திரம் என்ன என்பதைகண்டறியுமாறு சிறப்புவிசாரணைக் குழுவுக்கு உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளதை, மாலெ கட்சியும்,நாடு முழுவதும் உள்ளஜனநாயக, மதச்சார்பின்மைசக்திகளும் வரவேற்கின்றன.

2002ல் சங்பரிவார்கும்பலால், கொடூரமாக படுகொலை செய்யப்பட்டஇஷான் ஜஃப்ரியின் மனைவிஜகியா அஹிசன் கடந்த 7வருடங்களாக நடத்தியசட்டரீதியான போராட்டத்தின் விளைவே இந்த உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்.

கார்ப்பரேட் உலகின்சக்தி வாய்ந்த தலைமைநிர்வாக அதிகாரிகள் உட்படபலரால், எதிர்காலப் பிரதமர் என்று முன்னிறுத்தப்படும் மோடி, இஸ்லாமியமக்களை குறிவைத்து சங்பரிவார் கும்பல் தாக்குவதை குஜராத் அரசு நிர்வாகத்தின், காவல்துறையின்உயர்மட்ட அதிகாரிகள்,கண்டுகொள்ளாமல் இருக்க
வேண்டுமென்று பணிக்கப்பட்ட, படுகொலையைதிட்டமிட்ட 2002, பிப்ரவரி
27 அன்று நடந்த அமைச்சரவை கூட்டத்துக்கு தலைமைதாங்கினார் என்று அவர்மீதுகுற்றம் சாட்டப்பட்டுள்ளது.

முன்னாள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்இஷான் ஜஃப்ரி, மோடியை
மீண்டும் மீண்டும் தொலைபேசியில் அழைத்தார். அந்தஅழைப்புகள் புறக்கணிக்கப்பட்டன. மோடியின் அமைச்சர்கள், காவல்துறை கட்டுப்பாட்டு அறையில், காவல்துறை தலைமை அதிகாரிகள் அறைகளில் இருந்து
கொண்டு, வன்முறை வெறியாட்டம் நடந்த பகுதிகளுக்கு காவல் துறையினர்
அனுப்பப்படாமல் இருந்ததை உறுதி செய்தனர்என்று சொல்லப்படுகிறது.
உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் பற்றிய பாஜகவின் பதில்வினை அதன்
இயல்பை பிழையேதுமின்றி,வெளிப்படுத்துகிறது. பாஜகஅதிகாரபூர்வ பேச்சாளர்,
மோடி இதனை அவருக்குசாதகமாக மாற்றிக் கொள்வார் என்றார். ஒரு கேவல
மான மதவெறி பாசிச கட்சிதான், பலரும் படுகொலைசெய்யப்பட்ட ஒரு நிகழ்வில்சம்பந்தப்பட்டவர் என்றஅடிப்படையிலான ஒருஉச்சநீதிமன்ற விசாரணையை, ஒரு தேர்தலில், சாதகமாக பயன்படுத்திக் கொள்
வது பற்றி பெருமை பேசமுடியும்.

இதேசமயம், தேசியபாதுகாப்பு சட்டத்தில்,வருண்காந்தி கைது செய்யப்பட்டதை நெருக்கடி நிலைகாலத்தில் ஜெயபிரகாஷ்நாராயணன், வாஜ்பாய்போன்றவர்கள் கைது செய்யப்பட்டதுடன் அத்வானிஒப்பிடுகிறார். வருண்காந்தியும், பாஜகவும், வருண்காந்தி தந்தை சஞ்சய்காந்தியின் (நெருக்கடி நிலைகாலத்தில் இருந்த) வன்மையான அரசாங்கத்தின்உண்மையான வாரிசுகள்என்று வருண்காந்தி
பெருமை பேசினார். பாஜகவும், அத்வானியும் அவர்கள்என்ன சொல்கிறார்கள்
என்பதில் தெளிவு பெறவேண்டும்.
காங்கிரஸ்கொண்டு வந்த நெருக்கடிநிலைக்கு எதிரான போராட்ட பாரம்பரியத்தின் வாரிசுகளாக தங்களை முன்னிறுத்துகிறார்களா? அல்லது, ஒரு
வன்மையான, இரும்புமனிதரான பிரதமர், பொடாபோன்ற கொடூரமான
சட்டங்கள், அதிருப்தியாளர்களை சிறையிலடைத்த,இஸ்லாமியர் மீது கருத்
தடையை திணித்த சஞ்சய்காந்தியின் பாரம்பரியத்தைமேலே கொண்டு செல்லும்
அவர் மகன் ஆகியோருடன் நெருக்கடி நிலைமீண்டும் வர வேண்டும்
என்கிறார்களா?

காங்கிரஸ் தலைமையிலான அய்முகூ அரசாங்கம், 1984 சீக்கியர் படுகொ
லையை முன்னின்று நடத்திய காங்கிரஸ் தலைவர்கள்மீது விசாரணை நடத்துவதில், அவர்களை தண்டிப்பதில் மத்திய புலனாய்வுத்துறை காட்டும் ஒருதலைபட்சமான அணுகுமுறைஅம்பலமாகி யுள்ளது.மதவெறிபடுகொலைகள்,அரசாங்கங்களால், ஆதரிக்கப்பட்டு, கட்சி ஊழியர்களால் நடத்தப்படும் போதுகாங்கிரஸ், பாஜக ஆகியகட்சிகளின் இடையே எந்தவேறுபாடும் இல்லை.

வருகிற நாடாளுமன்ற தேர்தல்களில் இந்தக் கட்சிகளுக்கு மக்கள் பாடம்
புகட்டுவார்கள்.

0 Responses to குஜராத் படுகொலையில் மோடியின் பாத்திரம் பற்றிய விசாரணையை வரவேற்கிறோம்

About Me

1/10, 11வது தெரு,
கருணாநிதி நகர், அயனாவரம்,
சென்னை - 600 023
தொலைபேசி: 95-44-26743384
மின்னஞ்சல்
maleytheepori@yahoo.com

Followers

;
withdraw the false cases on comrade s.kumarasami and other pricol workers ONLINE PETITIONS [2] CLIK HERE
withdraw the false cases on comrade s.kumarasami and other pricol workers ONLINE PETITIONS [2] CLIK HERE