தமிழகத் தேர்தல் முடிவு தேசிய முடிவுகளைஅடியொற்றி அமைந்தது. கருத்துக் கணிப்புகள்,எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, முடிவுகள் திமுக-காங்கிரஸ்-விடுதலை சிறுத்தைகள் கூட்டணிக்கு சாதகமாகஅமைந்தன.
திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கே கூட இந்தமுடிவுகள் இனிய ஆச்சரியமாக முடிந்திருக்கிறது. தேர்தலில்கூட்டணி கணக்கீடுகளில், சாதி, சமூக சமன்பாடு பின்னுக்குதள்ளப்பட்டு அரசியல் காரணிகள், முன்னுரிமைகள்
தெளிவாக முன்னுக்கு வந்துள்ளன.

தேர்தலில் தமிழக மக்கள் பிரச்சனைகளை பின்னுக்குதள்ளி சிறீலங்கா தமிழ் மக்களின் பிரச்சனையை முதன்மைமற்றும் அடிப்படைப் பிரச்சனையாக்க முயன்ற அதிமுகமற்றும் திமுக கூட்டணிகளின் சந்தர்ப்பவாத ஒத்திசைவை
வாக்காளர்கள் தோற்கடித்துள்ளனர். துவக்கத்தில் வளர்ச்சி,முன்னேற்றம் என்பதை தேர்தலில் பிரச்சனையாகமுன்வைத்த கருணாநிதி, கூட்டணி மாற்றம் மற்றும்ஜெயலலிதா தமிழ் ஈழத்தை முன்னுக்கு கொண்டு வந்ததைஅடுத்து பொது வேலை நிறுத்தம், கடற்கரைஉண்ணாவிரதம் என இறங்கினார்.

இதை அடுத்துஜெயலலிதா, இலங்கைக்கு படையை அனுப்பி தனி ஈழம்
பெற்றுத் தருவேன் என்று விஸ்தரிப்பு வெறிவாத நிலைக்குச்சென்றார். சிறீலங்கா தமிழர் மீது பரிவும், அக்கறையும்கொண்டிருக்கும் வாக்காளர்கள் மேற்கூறிய சந்தர்ப்பவாதபோட்டி அரசியலால் அடித்துச் செல்லப்பட மறுத்து
விட்டனர்.

இந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணி அதிக இடங்கள்பெற்றிருந்தாலும், 2004 போல் புதுச்சேரி உள்ளிட்ட 40க்கு40 என்ற வாய்ப்பை திமுக பெறவில்லை. ஒரு கூட்டணியைமுழுமையாக அனுசரிப்பது என்ற முடிவை மாற்றியுள்ள
வாக்காளர்கள், கூட்டணிக்குள்ளும் கட்சிகளைபாகுபடுத்தி வாக்களித்துள்ளனர். திமுகவுக்கு அதிகஇடங்களை வழங்கியுள்ள வாக்காளர்கள், காங்கிரசைபின்னுக்கு தள்ளியுள்ளனர். முக்கிய தலைவர்களை
தோல்வி காண வைத்துள்ளனர்.

சிவகங்கையிலும் திருச்சியிலும் ராகுல் காந்தியின் மந்திரத்துக்கு வாக்காளர்கள்
வசியப்பட தயாராக இல்லை. சிவகங்கையில் சிதம்பரம்கூட சந்தேகத்துக்குரிய சொற்ப வாக்கு வித்தியாசத்தில்வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
விடுதலை சிறுத்தை கட்சியின் வெற்றியும் வாக்குகளும் புதிய தமிழகம் பெற்றுள்ள வாக்குகளும் தலித்அறுதியிடலைக் குறிக்கிறது. அதன் தலைவர்கள் (தலித்தில்இருந்து தமிழர், பகுஜன்னில் இருந்து சர்வஜன்) தொழில்
வளர்ச்சி என விலகிச் சென்றுகொண்டிருக்கின்றனர்.

அதிமுக - பாமகசந்தர்ப்பவாத கூட்டணியைவலுவான வகையில் நிராக
ரித்துள்ள வாக்காளர்கள், ஓர்இடம் கூட இல்லாதஅதிமுகவுக்கு 9 தொகுதி
களை தந்து பாமகவுக்கு ஓர்இடத்தைக் கூட தராமல்ஒதுக்கி வைத்துள்ளனர்.

தேசிய அளவில் மூன்றாவதுஅணிக்கு நேர்ந்த நிலைமைதமிழ்நாட்டிலும் நிகழ்ந்
துள்ளது என்றாலும் இங்குஇக்கூட்டணி 2வது அணிஎன்ற வகையில் நிராகரிக்கப்
பட்டுள்ளது. அதிமுக,பாமக, மதிமுக, இடதுகளைக் கொண்ட மெகாகூட்டணியின் மெகாசந்தர்ப்பவாதம் பாமக,மதிமுக, இடதுகளைகடுமையாக பாதித்துள்ளது.

பாமக நிராகரிக்கப்பட்டிருப்பதானது அக்கட்சியின்சொந்த அடித்தளத்திலேயே
அடிவிழுந்துள்ளது என்பதையே காட்டுகிறது. இடதுசாரிகள் அவர்களது பாரம்
பரிய செல்வாக்கு பகுதிகளில் தோற்றுப் போயுள்ளனஎன்பது அவற்றின் எதிர்கா
லம் குறித்த பிரச்சனையைமுன் கொண்டுவருகிறது.தலித் பிற்பட்டோர்
மத்தியிலிருந்து இளைஞர்பெண்களின் வாக்குகளைப்பெருமளவில் பெற்று கணிசமான முன்னேற்றத்தைக்காட்டியுள்ள தேமுதிக,திமுக, அதிமுகவுக்கு மாற்றுஎன்ற அடையாளத்தில்முன்னேறியுள்ளது. தனித்துப்
போட்டி என்ற அம்சமும்இதற்கு பெரிதும் உதவியுள்ளது.

தேர்தலில், குறிப்பிடத்தக்க, விதிவிலக்கான விசயம்மேற்குமாவட்டங்களில்கட்சியாக அறிவித்துக்கொண்டுள்ள கொங்குவேளாளர் முன்னேற்றக்கழகம் மிகக் குறைவானநாட்களில் செயல்பட்டு 5லட்சத்துக்கு மேற்பட்டவாக்குகளைப் பெற்றுள்ளது.கிராமப்புற மேட்டுக்
குடியினர் மற்றும் நகர்ப்புறசிறிய, நடுத்தர முதலாளிகளின் பிரிவின் தலைமையில்தனது சாதி வாக்குகளைத்திரட்டிக் கொண்டு நிர்ப்பந்த குழு அரசியலில்முன்வந்துள்ளது.

அதிமுகவின் செல்வாக்கு கோட்டையானதென்மாவட்டங்களில் (அதிமுக கூட்டணியின் பிரச்சாரமேடைகள் அனைத்திலும்இடதுசாரி கட்சிகளின்
மேடைகளிலும் பசும்பொன்முத்துராமலிங்கத் தேவர்படம் முக்கிய இடத்தைப்
பெற்றிருந்தது) திமுகவெற்றி பெற்றிருப்பதும்நிகழ்ந்துள்ளது.

விவசாய நெருக்கடி,வாழ்வுரிமை சரிவு, வேலைஇல்லா திண்டாட்டம்,
விலைவாசி உயர்வு என்றபின்புலத்தில், அதிமுககூட்டணி இதைப் பிரச்சனையாக்கத் தவறிய பின்னணியில் திமுகவின் சலுகைத்
திட்டங்கள் சாதகமானமதிப்பை பெற்றிருக்கின்றன.இந்த வாக்காளர்களின்
தீர்ப்பு, பெருமுதலாளித்துவஏகாதிபத்திய ஆதரவுவளர்ச்சித் திட்டங்களுக்கு
எதிராக, மக்கள் சார்புவளர்ச்சித் திட்டங்கள் என்பதை முன்கொண்டு வந்துள்ளது.

திமுக ஆட்சிக்குவெற்றி என்பதை விடவும்மேலும் நிர்ப்பந்தம் என்பதாகவே இதை கொள்ளவேண்டும்.
திமுக, அதிமுக இருதுருவ முகாமாக முன் வந்திருந்தாலும் அவைகளின்
அடிப்படையான பலவீனமான நிலை தொடர்கிறது.
அவை மீண்டு எழுந்து பலம்பெற்று விட்டன என்று கூறமுடியாது. பாஜக தலைமையிலான மூன்றாவது என்றபேச்சுக்கே இடமில்லைஎன்று ஒதுக்கப்பட்டுள்ளநிலையில் சக்திமிக்க மக்கள்போராட்டம், மாற்றுக்
கொள்கை, திசைவழி அடிப்படையிலான மூன்றாவதுசக்திக்கான வாய்ப்பு திட்ட
வட்டமாக முன்வந்துள்ளது.மாலெ கட்சி தனதுதேர்தல் பிரச்சாரத்தில்,
திமுக, அதிமுக கூட்டணியை எதிர்த்து பெருமுதலாளிகள், ஏகாதிபத்திய
ஆதரவு வளர்ச்சித் திட்டஎதிர்ப்பு, மக்கள் சார்புவளர்ச்சித் திட்ட அரசியல்
என்பதில் ஊன்றி நின்றது.இந்த நிகழ்ச்சிநிரலின் சரித்தன்மையையும் பொருத்தப்
பாட்டையும் தேர்தல்தீர்ப்பு தெளிவாக உணர்த்துகிறது.
நிலம், கூலி, வேலை,அமைப்புசாரா தொழிலாளர்நலன், தொழிற்சங்க அங்கீ
கார சட்டம், தலித் மக்களின் சமத்துவம் மற்றும்கவுரவம் ஆகிய பிரச்சனை
கள் மீது வர இருக்கிறகாலங்களில் மிகப் பெரியபோராட்டங்களுக்கான
வாய்ப்பும் தேவையும்உள்ளன. மாலெ கட்சி முழுமனதுடன் இந்தக் கடமைக்கு தன்னை அர்ப்பணித்துக் கொள்கிறது.

0 Responses to வாழ்வுரிமைகள், ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டத்தைத் தீவிரப்படுத்துவோம்

About Me

1/10, 11வது தெரு,
கருணாநிதி நகர், அயனாவரம்,
சென்னை - 600 023
தொலைபேசி: 95-44-26743384
மின்னஞ்சல்
maleytheepori@yahoo.com

Followers

;
withdraw the false cases on comrade s.kumarasami and other pricol workers ONLINE PETITIONS [2] CLIK HERE
withdraw the false cases on comrade s.kumarasami and other pricol workers ONLINE PETITIONS [2] CLIK HERE