இரட்டை மாட்டு வண்டி தொழிலாளர்களாக மாறிய,
விவசாய தொழிலாளர்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக
ஏஅய்சிசிடியு தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள்
கட்டமைத்து வருகிறது.
நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில், முக்கூடல், அம்பை,
சுத்தமல்லி பகுதிகளில் மணல் வண்டிகள் சிறை பிடிக்கப்
பட்டன. ஏஅய்சிசிடியு ஆர்ப்பாட்டங்கள், சாலை மறியல்
இயக்கங்களுக்கு அறிவிப்பு செய்ததால், தேர்தல் நேரத்தை
கணக்கில் கொண்டு வண்டிகள் விடுவிக்கப்பட்டன. முக்கூ
டல் சுற்றி உள்ள 5 கிராமங்களில் உள்ள தொழிலாளர்கள்
மாலெ கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்றனர். தேர்
தல் நிதி வழங்கினர்.
தேர்தல் முடிந்ததும் மாவட்ட நிர்வாகம், நான்குநேரி,
ராதாபுரம், அம்பை, ஆலங்குளம் தொகுதிகளில் 150க்கும்
மேற்பட்ட வண்டிகளையும், சுத்தமல்லியில் 50க்கும்
மேற்பட்ட வண்டிகளையும் சிறைபிடித்தது. தாமிரபரணி,
நம்பி ஆறு உட்பட அனைத்து பகுதிகளிலும் அழகிரி நேரடி
யாக மணல் கோரி நடத்துவதாக சொல்லப்படுகிறது.
நெல்லை மாவட்ட ஆட்சியர் எல்லா வட்டாட்சியர்
அலுவலகத்திற்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
மணல் வண்டிகளை 25 நாட்கள் சிறை வைக்க வேண்டும்
எனவும், மாட்டு வண்டி தொழிலாளர்களிடம் இனி மணல்
அள்ள மாட்டேன் என்று எழுத்துபூர்வமாக பெற்றுக்
கொண்டு, தொழிலாளி புகைப்படத்தை பெற்றுக் கொள்ள
வேண்டும் என்றும், அதே தொழிலாளி மணல் அள்ளினால்
கிரிமினல் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்க
வேண்டும் என்றும், அதில் சொல்லப்பட்டுள்ளது.
மணல் குவாரிக்கு ஆதரவாக, மணல் வண்டி
தொழிலாளர்களை கட்டுப்படுத்த பல பகுதிகளில் காவல்
துறையை ஏவி கடும் தாக்குதல்கள் நடத்தப்பட்ட சூழலில்,
மாவட்டம் முழுவதும் 25க்கும் மேற்பட்ட பகுதிகளை
சேர்ந்த தொழிலாளர்கள் ஏஅய்சிசிடியுவை அணுகினர்.
மாட்டு வண்டிகளை விடுவிக்க கோரி ஏஅய்சிசிடியு
முயற்சிகள் மேற் கொண்டது. ஆனால் அலட்சியப்படுத்தியது
அரசு நிர்வாகம். அம்பை தாலுகா அலுவலகம் முன்பு
ஆர்ப்பாட்டம் நடத்த அறிவிப்பு செய்யப்பட்டது. விதி 32
அமலில் உள்ளதால் அனுமதியில்லை என காவல்துறை
மறுத்தது. மீறி நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
சுவரொட்டிகள் பல பகுதிகளிலும் ஒட்டப்பட்ட நிலையில்,
அரசு நிர்வாகம் பேச்சு வார்த்தைக்கு அழைத்தது. மாவட்ட
ஆட்சியர் அறிவுரைப்படி, 25 நாட்களுக்குப் பிறகு, வாக்கு
மூலம் பெற்ற பிறகுதான் சிறைபிடிக்கப்பட்ட வண்டிகள்
விடுவிக்கப்படும் என்ற முன்வைப்பை சங்கம் நிராகரித்தது.
சிறை பிடிக்கப்பட்ட வண்டிகளை உடனடியாக விடு
விக்க வேண்டும், அரசாணை 541, 3.10.2003ன்படி, திருச்சி,
கரூர் பகுதிகளில் மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கு
மணல் அள்ளும் உரிமை இருப்பதுபோல், நெல்லையிலும்
வேண்டும், என்ற கோரிக்கைகளுடன் மனு வழங்கப்பட்டது.
மறுநாள் முதல் காலவரையற்ற பட்டினிப் போர் என
அறிவித்ததன் அடிப்படையில், காவல்நிலையத்தில் சிறை
வைக்கப்பட்ட 200க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் விடு
விக்கப்பட்டன. அரசாணையை அமல்படுத்த கோரி ஜ÷ன்
17 அன்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் 400க்கும் மேற்
பட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
அனைத்து பகுதிகளிலும் தொடர் இயக்கங்கள் நடத்துவது
எனவும், முடிவு செய்யப்பட்டுள்ளது.
கொள்ளையர்க்கு மணல்
தொழிலாளர்க்கு சிறை
- சங்கரபாண்டியன்

0 Responses to கொள்ளையர்க்கு மணல் தொழிலாளர்க்கு சிறை

About Me

1/10, 11வது தெரு,
கருணாநிதி நகர், அயனாவரம்,
சென்னை - 600 023
தொலைபேசி: 95-44-26743384
மின்னஞ்சல்
maleytheepori@yahoo.com

Followers

;
withdraw the false cases on comrade s.kumarasami and other pricol workers ONLINE PETITIONS [2] CLIK HERE
withdraw the false cases on comrade s.kumarasami and other pricol workers ONLINE PETITIONS [2] CLIK HERE