உண்ணாவிரதப் போராட்டம் முடித்துக் கொள்ளப்பட்ட பிறகு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட தோழர்களை தோழர் குமாரசாமி சந்தித்தார்.
பிரிக்கால் நிர்வாகம் பெரும்பான்மை சங்கங்களை ஏற்க மறுத்து மார்ச் 2007 முதல் இன்றுவரை பழிவாங்குதல் நடவடிக்கைகளை தொடர்ந்து வருகிறது. தொழிலாளர்களும் அன்று முதல்இன்று வரை, அடுத்தடுத்த போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பிரிக்கால் தொழிலாளர்கள்தங்கள் போராட்ட சாதனைகளை தங்கள் போராட்டங்கள் மூலம் தாங்களே திரும்பத் திரும்ப
முறியடித்து வருகின்றனர்.

ஓரிரு நாட்கள், ஓரிரு வாரங்கள் நடவடிக்கைள் மூலம் சங்கம் இந்த அரசாணைகளைப்பெற்றுவிடவில்லை. மாதக் கணக்கில் திட்டமிட்டு, ஒவ்வொரு காயாக நகர்த்தி, செங்கல் செங்கல்லாகபார்த்து சேர்த்து வைத்து, வலுவான அஸ்திவாரத்துடன் கட்டி எழுப்பியது.



இதுவரை அரசு செய்துள்ள தலையீடு

பிரிக்கால் தொழிலாளர் பிரச்சனையில்தமிழக அரசு இதுவரையில் 6 அரசாணைகள்வெளியிட்டுள்ளது. 10.04.2007 அன்று,வேலை நிறுத்தம், கதவடைப்பு, ஊர்மாற்றல்பிரச்சனைகளை நீதிமன்ற விசாரணைக்கு
அனுப்பியதோடு, வேலைநிறுத்தமும் கதவடைப்பும் தொடர்வதை தடை செய்து அரசாணைகள் 286 மற்றும் 287 ஆகியவற்றை வெளியிட்டது.

துணை யூனிட், ஒப்பந்த முறை மோசடிகளுக்கெதிராக சங்கம் வேலை நிறுத்தத்தை தொடர்ந்த போது, 24.05.2007 அன்று,அந்தப் பிரச்சனைகளை நீதிமன்ற விசாரணைக்கு அனுப்புவது என்பதோடு, தொழில்
தகராறுகள் சட்டம் 1947ன் 10 பி பிரிவின்கீழ், ஊர்மாற்றல், பிரேக் இன் சர்வீஸ்,
வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர்கள்இடத்தில் புதிதாக தொழிலாளர்களை பணியில் அமர்த்துவது, 11 முன்னணி தொழிலாளர்கள் பகுதிக் கதவடைப்பு ஆகியவை கூடாது எனவும் தொழிலாளர் வேலைக்குத்திரும்பும்போது எத்தகைய உறுதிமொழிகள் தரவேண்டும் என்றும் அரசாணைகள் 397மற்றும் 398 ஆகியவற்றை வெளியிட்டது.

இவை தொடர்பான வழக்குகள்31.07.2009 அன்று உச்சநீதிமன்றத்தில் இறுதி
விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட இருக்கின்றன.
16.05.2008ல் உச்சநீதிமன்றம் வழங்கிய இடைக்கால உத்தரவின்படி, பகுதிக்
கதவடைப்பில் இருந்த 62 தொழிலாளர்களை நிர்வாகம் திரும்பவும் வேலைக்கு எடுத்துக்கொண்டது. அதன்பின் பல உள்நோக்கங்களோடு, 11 தொழிலாளர்களையும் வேலைக்குஎடுத்துக் கொண்டது. அவர்களில் சிலரை தன்
விருப்பப்படி செயல்பட வைத்தது. இப்போது 29.06.2009 அன்று மீண்டும் 393 மற்றும் 394 என்ற இரண்டு அரசாணைகள் வெளியிடப்பட்டன.

அரசாணை 393

1. பிரிக்கால் லிமிடெட் பிளான்ட் 1
மற்றும் 3 ஆகியவற்றில் பயிற்சியாளர்கள்
மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களை நேரடி
உற்பத்தில் ஈடுபடுத்தக்கூடாது என்ற
தொழிற்சங்கங்களின் கோரிக்கை நியாய
மானதுதானா?
2. நிர்வாகம் உற்பத்தி நடைபெறவில்லை
என தன்னிச்சையாக அறிவித்த நாட்களில்,
டிசம்பர் 2008 முதல் தொழிலாளர் ஊதியத்
தில் இன்சென்டிவ் தொகையை பிடித்தம்
செய்து வருவது நியாயம்தானா?
3. தொழிலாளர்கள் ஒப்பந்தப்படியான
கடமையை நிறைவேற்றவில்லை என காரணம்
காட்டி 29.09.2004 மற்றும் 03.03.2004 தேதிகளிட்ட
12(3) ஒப்பந்தங்கள்படி வழங்கப்பட வேண்டிய
ஊதிய உயர்வு மற்றும் அகவிலைப்படி
ஆகியவற்றை 01.07.2007 முதல் நிறுத்தி
வைத்துள்ளது நியாயம்தானா? இல்லையெனில்,
உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.
இந்த எழுவினாக்களை கோவை
தொழிலாளர் நீதிமன்ற விசாரணைக்காக
அனுப்பியுள்ளது.

அரசாணை 394

அரசாணை 394, தொழிற் தகராறு
சட்டம் 1947ன் 10 பி பிரிவின் கீழ் பின்வரும்
கட்டளைகளைப் பிறப்பித்துள்ளது.
1. நிரந்தரத் தொழிலாளர்களின் வேலை,
ஊதியம், ஊக்கஊதியம் ஆகியவற்றை
பாதிக்கும் வகையில் நேரடி உற்பத்தி நடவ
டிக்கைகளில் பிரிக்கால் லிமிடெட் பிளான்ட்
1 மற்றும் 3 நிர்வாகம் பயிற்சியாளர்களையும்
ஒப்பந்தத் தொழிலாளர்களையும் ஈடுபடுத்
தக்கூடாது.
2. பிளான்ட் 1 தொழிலாளர்களுக்கு
01.06.2009 முதல் மாதாமாதம் சம்பளத்தோடு,
இடைக்கால நிவாரணம் ரூ.500 வழங்க
வேண்டும்.
3. பிளான்ட் 3 தொழிலாளர்களுக்கு
01.06.2009 முதல் மாதாமாதம் சம்பளத்தோடு,
இடைக்கால நிவாரணம் ரூ.400 வழங்க
வேண்டும்.
இது குறித்து கோவை தொழிலாளர்
நீதிமன்றத்துக்கு அனுப்பட்டுள்ள வழக்கின்
தீர்ப்புக்கேற்ப இடைக்கால நிவாரணத்
தொகை சரிக்கட்டிக் கொள்ளப்படும்

இந்த ஆணைகள் போடுவதற்கு
அரசு சொல்லும் காரணங்கள்

1. அரசாணை 393 படி, தொழிலாளர் எழுப்பியுள்ள
சில தொழிற்தகராறுகளை கோவை தொழிலாளர் நீதிமன்ற
விசாரணைக்காக அரசு அனுப்பியுள்ளது.

2. ஏற்கனவே, தொழிலாளர்கள் நிர்வாகத்தின் தொழி
லாளர் விரோத நடவடிக்கைகள் உள்ளிட்ட சில
பிரச்சனைகள் பற்றி எழுப்பியுள்ள 2007ஆம் ஆண்டு தொழில்
தகராறுகள் கோவை தொழிலாளர் நீதிமன்றம் முன்பு
நிலுவையில் உள்ளன.

3. கோவை மாவட்ட பிரிக்கால் எம்ப்ளாயீஸ் டிரேடு
யூனியன் மற்றும் கோவை மாவட்ட பிரிக்கால் தொழிலாளர்
தொழிற்சங்கம் தமது பொதுக் கோரிக்கைகள் தொடர்பாக
தொழிலாளர் துணை ஆணையர், கோவை முன்பு தொழில்
தகராறுகள் எழுப்பியுள்ளனர். 14.05.2009 முதல் வேலை
நிறுத்தம் செய்யப் போவதாக 28.04.2009 அன்று வேலை
நிறுத்த அறிவிப்பு தந்துள்ளனர்.

4. இரு தரப்பினரையும் அழைத்து, தொழிலாளர் துணை
ஆணையர் கோவை, பேசியபோது, நிர்வாகம் நேரடி உற்பத்
தியில் பயிற்சியாளர்களையும் ஒப்பந்தத் தொழிலாளர்
களையும் ஈடுபடுத்தும் தொழிலாளர் விரோத நடவடிக்
கைளை தொடர்கிறது என்றும் நிரந்தரத் தொழிலாளர்
களுக்கு பிளாக் விடுமுறை விடுவதன் மூலம், 29.09.2004
மற்றும் 03.03.2004 தேதிய ஒப்பந்தங்களின் ஒரு பகுதியான
இன்சென்டிவ் பிடித்தம் செய்து 25% சம்பளம் பறிக்கிறது
என்றும், 01.07.2007 முதல் ஊதிய உயர்வு மற்றும் பஞ்சப்படி
வழங்க மறுக்கிறது என்றும் தெரிவித்தனர்.

5. பிரச்சனையின் தீவிரத்தையும் 2007 கடந்த கால
அனுபவத்தையும் கணக்கில் கொண்டு, சட்டம் ஒழுங்கு
பிரச்சனை அதன் தொடர்ச்சியாக வேலையின்மை, அதனை
அடுத்த வேலைநிறுத்தம் அக்கம்பக்கம் பகுதி யூனிட்டு
களுக்கு பரவுதல் ஆகியவை நேரக்கூடும் என்றும், கருதிய
தால், தொழிலாளர் ஆணையர், தொழிலாளர் துணை
ஆணையர் மற்றும், கோவை துணை ஆணையர் (ஆய்வுகள்)
ஆகியோருக்கு தாக்கீதுகள் பிறப்பித்தும் தலைமை
தொழிற்சாலை ஆய்வாளர், ஆய்வு அதிகாரிகள் யாரையாவது
அனுப்புமாறு கேட்டுக்கொண்டும், சங்கத்தின் புகார் பற்றி
நேரடியாக ஸ்தல மட்ட ஆய்வு நடத்த ஏற்பாடு செய்தார்.
சங்கம், நிர்வாகம் நேரடி உற்பத்தியில் வேண்டும் என்றே
பயிற்சியாளர்களையும் ஒப்பந்தத் தொழிலாளர்களையும்
ஈடுபடுத்துகிறது, நிரந்தரத் தொழிலாளர்களுக்கு அவர்களை
பழிவாங்கும் ஒரே நோக்கத்தோடு பிளாக் விடுமுறை
அறிவித்து அதன் மூலம் ஊக்க ஊதியம் என்ற வகையில்
25% ஊதிய இழப்புக்கு வழிவகை செய்கிறது என்று புகார்
செய்துள்ளதன் மீது, இந்த ஸ்தல ஆய்வை செய்யச்
சொன்னார்.

6. தொழிலாளர் துறை அதிகாரிகள் மற்றும்
தொழிற்சாலைகள் ஆய்வாளர், கோவை பிரிக்கால் லிமிடெட்
பிளான்ட் 1 மற்றும் பிளான்ட் 3ல், 21.05.2009 மற்றும்
22.05.2009 ஆகிய தேதிகளில் ஸ்தல மட்ட ஆய்வு செய்தனர்.
22.05.2009 அன்று ஆய்வு அறிக்கை தாக்கல் செய்தனர். அந்த
அறிக்கையில் பயிற்சியாளர்களையும் ஒப்ந்தத்
தொழிலாளர்களையும் நேரடி உற்பத்தியில்
ஈடுபடுத்தியுள்ளனர் என்றும், நிரந்தரத் தொழிலாளர்களுக்கு
பிளாக் விடுமுறை விடப்படுகிறது என்றும் தெரிவித்தனர்.

7. நிரந்தரத் தொழிலாளர்களின் நலன்களுக்கு ஊறு
விளைவிக்கும் வகையில் நேரடி உற்பத்தியில் பயிற்சி
யாளர்கள் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களை ஈடுபடுத்
துவது, 01.07.2007 முதல் பஞ்சப்படி மற்றம் சம்பள உயர்வு
வழங்க மறுப்பது, டிசம்பர் 2008 முதல் சம்பளத்தின் ஒரு
பகுதியான ஊக்க ஊதியத்தை பிடித்தம் செய்வது ஆகியவை
தொடர்பான சங்கத்தின் கோரிக்கைகள் 29.06.2009
தேதியிட்ட அரசாணை 393 மூலமாக கோவை தொழிலாளர்
நீதிமன்றத்தின் முன்பு, விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
8. இவ்விவகாரத்தில் மேற்படி தொழிற்சங்கங்களின் 29
தொழிலாளர்கள் சாகும் வரை உண்ணாவிரதத்தை 15.06.2009
அன்று துவக்கினர். கோவை மாவட்ட காவல்துறை கண்கா
ணிப்பாளர் எழக்கூடிய சட்டம், ஒழுங்கு பிரச்சனையைக்
கணக்கில் கொண்டு தகுந்த நடவடிக்கைகள் எடுக்குமாறு
தமது 16.06.2009 கடிதம் மூலம் தொழிலாளர் துணை
ஆணையர், கோவை, அவர்களை கேட்டுக் கொண்டார்.
மேற்படி தொழில் நிறுவனத்தில் தொழில் அமைதி
காத்திடவும், இவர்களுக்கு ஆதரவாக மற்ற தொழிற்சாலை
தொழிலாளர்கள் கிளர்ச்சியில் ஈடுபடுவதை தடுத்திடவும்,
பொது வாழ்க்கை மற்றும் சட்டம், ஒழுங்கு நிலைமையில்
சீர்குலைவு நேராமல் தடுத்திடவும், விசாரணைக்கு அனுப்பப்
பட்டுள்ள எழுவினாக்களை கோவை தொழிலாளர்
நீதிமன்றம் விசாரித்துத் தீர்ப்பளிக்கும் வரை, பின்வருமாறு
தொழிற்தகராறு சட்டம் 1947 - 10 ஆ பிரிவின் கீழ், ஆணை
யிடுவது அவசியம் என அரசாங்கம் கருதுகிறது.
அரசாணை, இது தொடர்பான தொழிலாளர்
ஆணையரின் 23.06.2009 கடிதத்தை கணக்கில் கொண்
டுள்ளதாக, அரசு சொல்கிறது.

ஓரிரவில் பெற்ற வெற்றியல்ல
திட்டமிட்ட நடவடிக்கைகளின் விளைவு









துணை யூனிட் தொழிலாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் தொடர்பான வழக்கு
கள் கோவை தொழிலாளர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இவற்றோடு தொடர்புடைய உச்சநீதிமன்ற வழக்கு 31.07.2009வாக்கில் முடிவடைய வாய்ப்புள்ளது. அப்படிமுடிந்தால் கோவையில் உள்ள அவர்கள்
வழக்கும் விரைவில் நடந்து முடிய வாய்ப்பு உருவாகும்.இதற்கிடையில் பயிற்சியாளர்கள் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் நேரடி உற்பத்தியில் ஈடுபடுத்தப்படுவது தடை செய்யப்பட்டால், துணை யூனிட் மற்றும் ஒப்பந்தத்
தொழிலாளர்கள் என்று அழைக்கப்பட்டவர்களின் பிரச்சனை தீர வாய்ப்பு உருவாகும்என்ற அடிப்படையில்தான், சங்கம் திட்டமிட்டு காய்களை நகர்த்தியது. நிரந்தரத் தொழிலாளர்கள், பகுதி மக்களுக்காக,குறிப்பாக, துணை யூனிட் மற்றும் ஒப்பந்தத்தொழிலாளர் நலன் காக்கவே, அடுத்தடுத்த நடவடிக்கைகள் எடுத்துள்ளனர்.

இதற்கிடையில், போராடும் சங்கங்களைஉடைக்க நிர்வாகம் பலவகைப்பட்ட
பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. வேலைநீக்கம், தற்காலிகப் பணிநீக்கம்,எட்டுநாள் சம்பளப் பிடித்தம், பிரேக் இன்சர்வீஸ், பதவி இறக்கம், ஒப்பந்த போனஸ்மறுப்பு, ஓய்வு பெற்றவர்கள், இறந்தவர்கள்பாக்கிகளை கொடுக்க மறுப்பது, குண்டர்களை கொண்டு தாக்குவது, பொய் வழக்குபோட்டு சிறையில் தள்ளுவது, வன்முறையைத் தூண்டி சிக்க வைக்கப் பார்ப்பது என
எல்லாவித தொழிலாளர் விரோத ஆயுதங்களையும் பயன்படுத்தித் தாக்கியது.
கடைசியாக, பணத் தூண்டில் போட்டுசிக்க வைக்கப் பார்த்தது. 2007 ஜ÷லை முதல் ஒவ்வொரு தொழிலாளிக்கும் வழங்கப்படாமல் இருக்கிற சம்பளம் மற்றும் பஞ்சப்படி,மாதாமாதம் சராசரியாய் குறைந்தபட்சம் ரூ.950, அதிகபட்சம் ரூ.1650 இருப்பதாகவும்,போராடும் சங்கங்களை விட்டு வந்தால் இந்த பாக்கிகளை உடனடியாக இரண்டு தவணைகளில் தருவதாகவும் அறிவிப்பு வெளி
யிட்டது. பள்ளி, கல்லூரி திறக்கும் நேரத்தில்,எப்படியும் ஆள் பிடிக்கலாம் என்று முயற்சித்தது. ஆனால் பிரிக்கால் தொழிலாளர்கள் போராட்டம் என்ற பதிலை தந்தார்கள்.

ஏற்கனவே அரசு எடுத்த நடவடிக்கைகளை நிர்வாகம் சட்டை செய்யாததால்,
அரசு தனது முந்தைய நடவடிக்கைகளின் தர்க்கரீதியான தொடர்ச்சியாக 10 பி ஆணை பிறப்பிக்க நேர்ந்தது. ஜ÷லை 2007 முதல் ஒப்பந்தப்படி ஊதிய
உயர்வு மற்றும் பஞ்சப்படி தரப்படவில்லைஎன்றும், வேலை நீக்கம் செய்யப்படும் தொழிலாளிக்கு அறிவிப்பு சம்பளம் தரும்போது இந்தத் தொகைகள் தரப்படுவதையும் அரசுக்கு ஆதாரபூர்வமாக எடுத்துக் காட்டியது.

அந்த அடிப்படையில், 30.03.2009 அன்று
பிரிக்கால் நிறுவன போர்டு உறுப்பினர்களுக்கு தொழிற் தகராறு சட்டம் 1947ன்பிரிவு 29ன் கீழ் ஏன் பிராசிகியூஷன் செய்யக் கூடாது என அரசு அறிவிப்பு வழங்கியது.
சங்கங்களை விட்டு விலகினால்தான்,பிடித்தம் செய்யப்பட்ட சம்பளத்தைத் தர
முடியும் என்று நிர்வாகம் அறிவிப்புவெளியிட்டதை, ஆதாரபூர்வமாக சங்கம்
எடுத்துச் சொன்னது.

தொழிலாளர் விரோத
நடவடிக்கை என்பதற்காக நிர்வாகத்தின் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது எனக்காரணம் கேட்டு இந்த விசயத்திலும் 30.03.2009
அன்று ஒரு குறிப்பாணை வழங்கியது.பயிற்சியாளர்கள் மற்றும் ஒப்பந்தத்
தொழிலாளர்களை நிர்வாகம் நேரடி உற்பத்தியில் ஈடுபடுத்துகிறது என்பதை, பல்வேறு ஆவணங்கள் மூலம், சங்கம் அரசின் கவனத்துக்குக் கொண்டு வந்தது. இந்தப் பின்னணியில், முதல் நோக்கில், சங்கத்தின் புகார் சரியேஎன்று தெரிவதால், பயிற்சியாளர்கள் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் நேரடி உற்பத்தி
யில் ஈடுபடுத்தப்படக் கூடாது என, 15.04.௨00 9அன்று அரசு அறிவுரை வழங்கியது.
இந்த நடவடிக்கைகள் மற்றும் அறிவுரைகளை நிர்வாகம் ஏற்க மறுத்ததால், சங்கம் வேலைநிறுத்த அறிவிப்பு தந்தது. அதன் பின்னரே ஸ்தல மட்ட ஆய்வு நடத்தப்பட்டுஅறிக்கை தரப்பட்டது.இந்தப் பின்னணியில், 17.05.2009 அன்று
நடந்த பொதுப் பேரவையில் தோழர்குமாரசாமி கலந்துகொண்டார். போராட்ட
வியூகங்கள் அமைக்கப்பட்டன. 10 பிஆணை வெளியிடக் கோரி, பல்லாயிரக்
கணக்கான மக்களிடம் கையெழுத்துக்கள் பெறப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டது.
15.06.2009 முதல் தொழிற்சங்க அங்கீகார சட்டம், 10 பி ஆணை ஆகிய கோரிக்கை
களுக்காக தோழர் ஜானகிராமன் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம்
துவக்கப்பட்டது.

17.06.2009 அன்று தொழிலாளர்அமைச்சரையும் சட்டமன்ற உறுப்பினர்
களையும் சந்தித்து மனு தரப்பட்டது.பிரிக்கால் தொழிலாளர் போராட்டத்துக்கு ஆதரவாக டிஅய்டிசி, ஹ÷ண்டாய் தொழிலாளர்கள் உணவுப் புறக்கணிப்பு,
சுவரொட்டி பிரச்சாரம், போராடும் தொழிலாளர்களை நேரில் சந்திப்பது, என
பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்தனர்.

17.06.2009 அன்று தமிழகமெங்கும்
ஏஅய்சிசிடியுவும் அனைத்திந்திய விவசாயத்
தொழிலாளர் சங்கமும் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பிரிக்கால் தொழிலாளர் பிரச்சனை முக்கிய பிரச்சனையாக எடுத்துக் கொள்ளப்
பட்டது.வேலைக்கு சென்று கொண்டிருந்தபிரிக்கால் தொழிலாளர்கள் தாங்களாகவே உணவுப் புறக்கணிப்பு செய்தனர். கோரிக்கைகளை விளக்கி, ஆதரவு கோரி, ஒரு லட்சம் பிரசுரங்கள் விநியோகித்தனர். உண்ணாவிரதத்தில் இருந்த போராட்டக்காரர்களின் புகைப்படங்களுடன் 90 டிஜிட்டல் பேனர்கள் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டன.பல்வேறு அரசியல் கட்சியைசேர்ந்தவர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள்,சமூக ஆர்வலர்கள், தொழிலாளர்கள், பகுதிமக்கள் வரிசையில் நின்று உண்ணாவிரதத்தில்
இருந்த போராட்டக்காரர்களை சந்தித்தனர்.

தோழர் குமாரசாமி, 26.06.2009 அன்றுகாலை மாண்புமிகு தொழிலாளர் அமைச்சருடன் தொலைபேசியில் பேசினார். அன்று மாலை நேரில் சந்தித்தார்.
போராட்டம் 16ஆம் நாளில் நுழைந்தபோது, அரசின் அறிவிப்பையொட்டி
முடித்துக் கொள்ளப்பட்டது.

0 Responses to சாதனை படைக்கும் பிரிக்கால் தொழிலாளர்கள்

About Me

1/10, 11வது தெரு,
கருணாநிதி நகர், அயனாவரம்,
சென்னை - 600 023
தொலைபேசி: 95-44-26743384
மின்னஞ்சல்
maleytheepori@yahoo.com

Followers

;
withdraw the false cases on comrade s.kumarasami and other pricol workers ONLINE PETITIONS [2] CLIK HERE
withdraw the false cases on comrade s.kumarasami and other pricol workers ONLINE PETITIONS [2] CLIK HERE