மே தின செய்திகள்

Posted by orumaipadu mandram Sep 24, 2009

உலகம் வேகமாக மாறிக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் காலடியில்
இருக்கிற, நிதி மூலதன ஏகாதிபத்தியத்தின்காலடியில் இருக்கிற பூமி நழுவிக் கொண்டிருக்கிறது. ஏதேதோ சவால்விட்டவர்கள்,என்னென்னவோ ஆட்டம் போட்டவர்கள்இன்று அம்பலப்பட்டு நிற்கிறார்கள்.

தடுமாறிக் குப்புற விழுந்து, மீண்டும் எழப்பார்க்கிறார்கள். மீண்டும் எழும் முயற்சி
களில், ஓர் அரசியல் நடவடிக்கையாகத்தான், ஒபாமா அமெரிக்காவின் குடியரசுத்
தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஒபாமா பதவி ஏற்று 100 நாட்கள்ஆகிவிட்டன. ஏதாவது உருப்படியாகச்செய் 1000 நாட்களாவது வேண்டும்என்கிறார். இந்தக் காலகட்டத்தில், லகில்
முக்கிய சில மாற்றங்களும் நடந்துள்ளன.ஏகாதிபத்தியத்திற்கும்மூன்றாம் உலக நாடுகளுக்கும்இடையே முரண்பாடுஈராக்கில் இருந்து அமெரிக்கா
வெளியேறியாக வேண்டிய கட்டாயம்ஏற்பட்டுள்ளது. அதுகெட்ட போர்
ஆகிவிட்டது. ‘நல்ல போரானஆப்கன்போர், பாகிஸ்தான் வரை நீண்டுள்ளது.
ஆப்கனில் இருந்து பல வருடங்களுக்குப்பிறகு, தனது கடைசி காலங்களில் சோவியத்யூனியன் வெளியேறியது. அந்த வரலாற்றுத்தவறை தொடர்கிற அமெரிக்காவிற்கும்,அதே கதிதான் கடைசியில் காத்திருக்கிறது.
அமெரிக்கா - இஸ்ரேல் அச்சு,லெபனானின், இஸ்புல்லாவிடம் மூக்குடைபட்டது.

பாலஸ்தீனமும் ஹமாசும்,பேரழிவுகளுக்கு மத்தியிலும் தலைநிமிர்ந்துநிற்கின்றன. அமெரிக்க வெளியுறவுஅமைச்சர் ஹிலாரியின் நடவடிக்கைகளும்,ஒபாமா, இஸ்ரேல் பிரதமர் இடையேநடக்க உள்ள சந்திப்பும், பாலஸ்தீனமக்களின் சுதந்திர தனி அரசு உரிமையை,ஒப்புக்காவது ஒப்புக்கொண்டாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஈரான்,
ஏகாதிபத்திய அச்சுறுத்தல்களுக்கு அடங்கமறுக்கிறது. சமாதானத்திற்கு தயார், அதேநேரம், வாலாட்டினால் ஒட்ட நறுக்கிவிடுவோம் எனத் துணிந்து சொல்கிறது.அமெரிக்காவும் இசுலாமிய உலகமும்அமெரிக்கா தலைமையிலான
ஏகாதிபத்தியங்கள், இசுலாமிய பயங்கரவாதத்திற்கெதிராக போர் தொடுத்தன.

இசுலாமிய பாசிசம் என்றும் பேசின.இசுலாம் என்பதையே சாத்தான்மயமாக்கின.நாகரிகங்களுக்கிடையிலான மோதல் எனநயவஞ்சகம் செய்தன. ஒவ்வொரு இசுலாமியரும் உள்ளார்ந்த பயங்கரவாதியே என்ற
பொய்யான பிம்பத்தை செயற்கையாகஉருவாக்கின. ஒபாமா, அமெரிக்க குடியரசுத்தலைவர் தேர்தலின்போது, தன் பக்கத்தில்எந்த இசுலாமியரும் நிற்பதைக் கூட மிகுந்தகவனத்துடன் தவிர்த்தார்.

இன்றென்ன நிலைமை? ஒபாமாதுருக்கி செல்கிறார். துருக்கியின் பிரதான
பத்திரிகை, ‘நல்வரவு உசேன்எனச் செய்திவெளியிடுகிறது. துருக்கி நாடாளுமன்றத்திற்கு, அதன் சபாநாயகர், ஒபாமாவை,பாரக் உசேன் ஒபாமா என அறிமுகப்படுத்துகிறார். அல் கொய்தா, பேரழிவுஆயுதங்கள், தலிபான் எனத் திரும்பத்திரும்பச் சொல்லி ஈராக்கை ஆப்கானிஸ்தானை ஆக்ரமித்த அதே அமெரிக்காவின்தற்போதைய குடியரசுத் தலைவர், துருக்கிநாடாளுமன்றத்தில் பேசுகிறார்.‘அமெரிக்கா இசுலாமோடு போர்புரியவில்லை. எப்போதும் இசுலாமோடுபோர் புரியாது. அமெரிக்கா கொண்டுள்ளஅல்கொய்தா எதிர்ப்பின் அடிப்படையில்,அமெரிக்காவின் இசுலாமிய உலகுடனானஉறவு தீர்மானிக்கப்படாது.

துருக்கியபழமொழி ஒன்று சொல்வதுபோல் எரியும்நெருப்பை தீப்பிழம்புகளால் அணைக்கமுடியாது. அமெரிக்க அய்க்கிய நாடுகள்,அமெரிக்க இசுலாமியர்களால் வளப்படுத்தப்பட்டுள்ளது. பல அமெரிக்கக் குடும்பங்களில் இசுலாமியர்களும் இருக்கின்றனர்.
பல அமெரிக்கர்கள் இசுலாமியர்கள்பெரும்பான்மையாக உள்ள நாடுகளில்
வாழ்கின்றனர். நானே அவர்களில் ஒருவன்என்பதால் எனக்கு இது பற்றி நன்றாகத்தெரியும்.’
ஒபாமா, உசேனாகவும் பேசுகிறார்.துருக்கியின் ஏகப்பெரும்பான்மை மக்கள்
இசுலாமியர்கள். துருக்கி, வடக்குஅட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு,
நேட்டோ, என்ற அமெரிக்கா - கனடா -அய்ரோப்பா இராணுவக் கூட்டில் ஓர்
உறுப்பு நாடு. அந்த வகையில் ஏகாதிபத்தியப் போர்களில் பங்கு பெற்றுபெரும்பாதிப்புக்களைச் சந்தித்துள்ளது. ஆனாலும்கிறிஸ்துவ அய்ரோப்பா, இசுலாமியதுருக்கியை, அய்ரோப்பிய ஒன்றியஉறுப்பினராக அனுமதிக்கமறுக்கிறது.

அய்ரோப்பிய ஒன்றியம், துருக்கிக்கும்இடம் தந்து, தன் பன்முகத் தன்மையை
வளப்படுத்திக் கொள்ளுமாறு, ஒபாமாபரிந்துரையும் ஆலோசனையும் தந்துள்ளார்.பக்கத்தில் இருந்தே பலத்த அடிஏப்ரல் 17 - 18 தேதிகளில்,
அமெரிக்காக்களின் உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் கரீபியன் தீவு நாடுகள்
உட்பட 34 நாடுகள் கலந்து கொண்டன.

ஒபாமா கலந்து கொண்டார். ஒபாமாவோடுகை குலுக்கிநான் உங்கள் ண்பராக
இருக்கவே விரும்புகிறேன்எனச்சொன்னார் சாவெஸ். அப்போது, உருகுவே
எழுத்தாளர் எடுவர்டோ கெலானோவின்,‘லத்தீன் அமெரிக்காவின் திறந்த இரத்த
நாளங்கள்: அய்ந்து நூற்றாண்டுகொள்ளையும் சூறையாடலும்என்ற
நூலை ஒபாமாவுக்கு நினைவுப் பரிசாகத்தந்தார். அந்த நூல், 5 நூற்றாண்டுகளாக,
அமெரிக்காவும் பிற ஏகாதிபத்தியங்களும்,கருப்பின மக்கள் மீது திணித்த அடிமை
விலங்குகளை, லத்தின் அமெரிக்க, கரீபியநாடுகளை சுரண்டிச் சூறையாடியதை,
அடக்கி ஒடுக்கியதை, மனித குலத்தின்
மனச்சாட்சிக்கு நினைவுப்படுத்துகிறது.ஒபாமா தேர்தலில் வென்றபிறகு,
ஒபாமா, வரும் நாட்களில் குடியிருக்கப்போகும் வெள்ளை மாளிகை கருப்பு
அடிமைகளால் கட்டப்பட்டது என்பதைப்போதும் எப்போதும் மறக்கக்கூடாது’,
என்று சொன்னவர் எடுவார்டோகெலானோ.
ஒஏஎஸ் என்ற அமெரிக்காக்களின்அமைப்பை இவ்வளவு காலமாக அமெரிக்க
ஏகாதிபத்தியம் தன் கைப்பிடிகளில்வைத்திருந்தது. 1967ல் கியூபாவின் மார்க்சிய
- லெனினிய சமூக அமைப்பு, ஓஏஎஸ்




அமைப்பிற்கு உகந்ததல்ல எனக் காரணம்காட்டப்பட்டு கியூபா வெளியேற்
றப்பட்டது. ஏகாதிபத்திய எடுபிடிகளின்,
மக்கள் விரோதிகளின் கூடாரமாகமாற்றப்பட்டது. இப்போதைய ஊஈஎச்சில்
கீழ்க்காற்று மேல்காற்றை வெல்கிறது.
கியூபா, வெனிசூலா வெளிச்சத்தில்,அவை கொடுத்த நம்பிக்கையில், தென்
அமெரிக்க நாடுகளில் இளஞ்சிவப்பு அலைவீசியது. அந்த வரிசையில் கடைசியாகஎல்சல்வடார் சேர்ந்தது. மிகச் சமீபத்தில்ஈக்வடாரின் ரஃபேல் கோரியா ஏகாதிபத்தியஎடுபிடிகளின் ஒன்றுகுவிக்கப்பட்ட எதிர்ப்
பையும் முறியடித்து, 52% வாக்குகள் பெற்றுதிரும்பவும் வென்றுள்ளார். பொதுவாக,தென் அமெரிக்க கண்டத்தில், ‘ஏகாதிபத்தியத்தில் இருந்து சுதந்திரம்: பரந்த பொருளில்ஒரு மக்கள் சார்பு நிலைஎன்ற அடிப்படையில் ஓர் அறிவிக்கப்படாத முன்னணிஉள்ளது.

இதன் உந்து விசையாக கியூபாவும்வெனிசுலாவும் உள்ளன. பிரகடனம் செய்து
கொண்ட கூட்டாளிகளாக, பொலிவியா,நிகாரகுவா, ஈக்வடார் உள்ளன.
ஓபாமாவுக்கு முன்பு உச்சி மாநாட்டில்பேசிய பிரேசில் தலைவர் லூலா,
அர்ஜென்டினா தலைவர் கிறிஸ்டினா,நிகாரகுவா தலைவர் டேனியல் ஒர்டேகா,
பொலிவியாவின் ஈவோ மொரேல்ஸ்,அனைவருமே, அமெரிக்க ஏகாதிபத்தியத்
தை, கியூபா மீதான தடைக்காக,பொருளாதார முற்றுகைக்காக, குற்றவாளிக்
கூண்டில் நிறுத்தினார்கள்.

சாவெஸ்லத்தீன் அமெரிக்க மக்களின்கவுரவத்தின் அடையாளச் சின்னம் கியூபா.
அமெரிக்கா, எங்கள் நாடுகளின் உரிமைகளைக் காலில் போட்டு மிதிப்பதை,
நாங்கள் ஏற்கமுடியாதுஎன முழங்கினார்.ஈவோ மொரேல்ஸ், ‘கியூபா, ஒரு
மார்க்சிஸ்ட், லெனினிஸ்ட், சோசலிஸ்ட்,கம்யூனிஸ்ட் நாடு என்று காரணம் சொல்லி,அதனை வெளியேற்றினார்கள். நான்
சொல்கிர்ரீன், நான் ஒரு மார்க்சிஸ்ட்,லெனினிஸ்ட், சோசலிஸ்ட், கம்யூனிஸ்ட்.
முடிந்தால் என்னை வெளியேற்றுங்கள்எனச் சவால் விடுத்தார்.

ஒபாமா நெளிந்தார். சமாதானக் கரம்நீட்டினார். நகைச்சுவையாய்ப் பேசி
தப்பிக்கப் பார்த்தார். ஒபாமா, வரலாற்றின்குற்றவாளிக் கூண்டில் இருந்து பதில்
சொன்னார். ‘நான் கடந்த காலம் பற்றிவிவாதிக்க வரவில்லை. எதிர்காலம் பற்றிப்
பேசவே விரும்புகிறேன். நான் மூன்று வயது
சிறுவனாக இருந்தபோது நடந்தவற்றுக்குஎன்னைக் குறை சொல் மாட்டீர்கள் எனநம்புகிறேன்.’
கியூபாவும் காஸ்ட்ரோவும் மாநாட்டில்கலந்து கொள்ளவில்லை. ஆனால்
அவர்களே மாநாட்டில் நீக்கமற நிறைந்திருந்தனர். பிடல் காஸ்ட்ரோ வரலாறு தம்மைவிடுவிக்கும் என்றார். அடுத்த மாதம்அமெரிக்காக்களின் அமைப்பு, தன்
அயல்விவகாரத் துறை அமைச்சர்கள்கூட்டத்தை நடத்தும். அப்போது மூன்றில்
இரண்டு பெரும்பான்மை இருந்து, கியூபாமீண்டும் அமெரிக்காக்களின் அமைப்பில்தலை நிமிர்ந்து திரும்பவும் நுழையும்.ஏகாதிபத்தியங்களுக்கு
இடையிலான முரண்பாடுபுகழ்பெற்ற லத்தீன் அமெரிக்க
எழுத்தாளர் கேப்ரியல் மார்க்வெஸ்,அமெரிக்காவை, ‘இலையுதிர் கால
மேலாதிக்கம்என விவரித்தார். இன்றுஅமெரிக்க, அய்ரோப்பிய அச்சில் விரிசல்கள்துவங்கி விட்டன. அய்ரோப்பியர்கள்,ரஷ்யாவை, சீனாவை, அவற்றோடுநல்லுறவு கொண்டுள்ள ஈரானை, பகைத்துக்
கொள்ள விரும்பவில்லை.

ஈரானுக்கு
எதிரான, அமெரிக்க - இஸ்ரேல் போர்வெறிக் கூப்பாடு, அய்ரோப்பியர்களுக்குஉவப்பு அளிக்கவில்லை. ஆப்கன் போர்,
அமெரிக்காவின்நல்ல போர்’, அவர்களுக்கு நல்லது என அவர்கள் நம்பவில்லை.
ஒபாமா கொஞ்சியும் கெஞ்சியும் பார்த்தபிறகும் அவர்கள் தமது இராணுவங்களைப்பிணைக்க விரும்பவில்லை. பாட்ரிக்புக்கானன் சொல்கிறார்: ‘பிரிட்டிஷ்சாம்ராஜ்யம் தனது கூடாரத்தைக் காலி
செய்துவிட்டுப் புறப்பட்ட பிறகு,நேட்டோவின் அய்ரோப்பியர்கள் எந்த
தொலைதூர நாட்டிலும் போரிடவில்லை.

ஆப்கானிஸ்தானில் இருந்து அய்ரோப்பாவுக்கு எந்த ஆபத்தும் ல்லை. அங்கே
எமக்கு எந்த ஆதாய நலன்களும் இல்லை.ஒசாமா பின்லேடன் தனது போர்
பிரகடனத்தில், அமெரிக்கா, சவூதி அரேபியபுனித பூமியை ஆக்ரமித்துள்ளதால்,
இசுலாமிய ஈராக்கின் கழுத்தை நெறித்துக்கொல்வதால், பாலஸ்தீனத்தை ஒடுக்க
இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவதால்தான், அமெரிக்கா தாக்கப்பட்டதாகச்
சொன்னார். அய்ரோப்பாவிற்கு, சவுதிஅரேபியாவில், இராணுவத் துருப்புக்கள்
இல்லை. ஈராக்கில் இருந்து வெளியேறிவருகிறது.

பாலஸ்தீன அரசு வேண்டும்என்கிறது. ஆப்கானிஸ்தான் போரில்
ஈடுபடுவதில், அவர்களைக் கொல்வதில்நமக்கு தொடர்பு இல்லாவிடில், தாம்
தாக்கப்பட வாய்ப்புக்கள் இல்லை எனஅய்ரோப்பியர்கள் கருதுகின்றனர்.’
இந்த விவாதம் வேறொரு நிலை வரைஅமெரிக்காவிலேயே சென்றுள்ளது.
இரண்டாம் உலகப் போர் முடிவில்பேரழிவுகளை பெரும் தியாகங்களுடன்
எதிர் கொண்டு சோசலிச சோவியத்யூனியனும் சோசலிச முகாமும் எழுந்தன.

அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய உலகம், சோசலிச முகாமை
நேட்டோ மற்றும் பனிப்போரால் எதிர்கொண்டது. அப்போது நேட்டோ
உறுப்பினர்கள் எண்ணிக்கை 14. சோவியத்சரிவுக்குப் பிறகு, அதிலும் குறிப்பாக,
அமெரிக்காவின் சமீப கால ஒரு துருவமுயற்சிகளுக்குப் பிறகு நேட்டோ
நாடுகளின் எண்ணிக்கை 26 என உயர்ந்தது.
அய்ரோப்பா, ‘சட்டி சுட்டதடா,கைவிட்டதடாஎன உதறிக் கொள்ளும்
போது, பாஸ்டன் பல்கலைக் கழக சர்வதேசஉறவுகள் நிபுணர் ஆண்ட்ரூ பராசெவிக்எழுதுகிறார். ‘நேட்டோவின் (துவக்க கால)குறிக்கோளுக்கு இப்போது அவசியமில்லை.நேட்டோ திரும்பவும் செயல்படவேண்டுமானால், அமெரிக்கா அதில் இருந்துவெளியேற வேண்டும் அய்ரோப்பாவின்பாதுகாப்பிற்கு அய்ரோப்பாவே பொறுப்பேற்க வேண்டும்.’ஏகாதிபத்திய நாடுகளுக்குள் முரண்பாடுஇந்த நாடுகளின் மூலதனத்திற்கும் கூலிஉழைப்பிற்குமான முரண்பாடு தீவிரமடைந்துள்ளது.
நெருக்கடி
வாட்டி வதைத்தஅய்ஸ்லாண்டு நாடு நிதிச் சூதாடிகளின்
சொர்க்கபுரியாக இருந்த அய்ஸ்லாண்டு,(அய்ரோப்பியப் பொருளில்) ஓர் இடதுசாரிபெண் பிரதமரைத் தேர்வு செய்துள்ளது.அய்ரோப்பாவெங்கும், வேலை பறிப்பு,

வேலையின்மை, ஊதியப்பறிப்பு, சலுகைவெட்டு என, கொள்ளை நோய் பரவுகிறது.பிரான்சின் உழைக்கும் மக்கள் திரும்பத்திரும்ப எழுகிறார்கள்.

பிரபலமான
அய்ரோப்பிய நாளேடுகள், அரண்கள்அமைத்து தெருச் சண்டைகள் நடக்கும்காலம் நெருங்கிவிட்டதாக, அபாயஅறிவிப்பு தருகின்றன. வெளிநாடுகளில்இருந்து வந்து குடியேறி தம் உழைப்பால்அந்தந்த அய்ரோப்பிய நாடுகளின்செல்வங்களைக் குவித்தவர்களுக்குஎதிரான, ஆபத்தான இனப்பகை, குறுகியதேசீய வெறி தூண்டப்படுகிறது.வாμங்டனில், தமது நூறு நாட்கள்
ஆட்சிக்குப் பிறகான நிலைமையை ஒபாமாவிவரிக்கிறார். ‘ஒரே நேரத்தில், முட்டிமோதும் வகையில் எழுந்துள்ளநெருக்கடிகள் ஒன்று சேர்வதைக் கண்டுநான் ஆச்சர்யப்படுகிறேன்.

பல
லட்சக்கணக்கான அமெரிக்கர்களுக்கு வேலைகளும் இல்லை. வீடுகளும் இல்லை. இந்ததேக்க நெருக்கடி முடியும் முன்பு, மேலும்கூடுதலான இழப்புக்கள் இருக்கும்.தேவையான அளவுக்கு கடன்களின்ஓட்டமும் இல்லை.’ தீராத, தீர்க்க முடியாதநெருக்கடியை எத்தனை காலம் தணிக்கமுடியும்? மக்கள் போராட்டங்கள்,ஏகாதிபத்திய நாடுகளைத் தீண்டாமல்விட்டு விடாது.
ஏகாதிபத்தியம் திருந்தாதுஒபாமா ஆப்கன் போரைத்தீவிரப்படுத்துகிறார். புஷ் ஆட்சிக்காலத்தைக் காட்டிலும், ஒவ்வொரு நாளும்அதிகமானவர்கள் கொல்லப்படுகிறார்கள்.கொல்லப்படுபவர்களில் மூன்றில் இருவர்
பெண்கள். குழந்தைகள்.






தலிபான்கள் கைகளில் பாகிஸ்தானின்அணு ஆயுதங்கள் கிடைத்துவிடக் கூடாது
என்று அமெரிக்கா புதிய சாக்கு சொல்கிறது.அமெரிக்காவின் ஆப்கன், பாகிஸ்தான்கொள்கை, இந்தியாவுக்கு பேராபத்தையேஏற்படுத்தும். ஏகாதிபத்தியம் என்றால்போர். ஏகாதிபத்தியம் மக்கள் மீது போர்
தொடுக்கும். ஒபாமாவால் எந்த மாற்றமும்கொண்டு வரமுடியாது.
நிஜப்புலி காகிதப் புலியாக்கப்பட வேண்டும்உடனடிப் பொருளில் ஏகாதிபத்தியம்
நிஜப்புலி என்றாலும் அது இறுதிஆராய்ச்சியில் காகிதப் புலியே என்றார்
மாவோ.

தோழர்
லெனின் ஏகாதிபத்தியநிதி மூலதனத்தை ஒட்டுண்ணித் தன்மை
வாய்ந்தது என்றார். ஒட்டுண்ணி உலகநாடுகளின் நிஜப் பொருளாதாரத்தில்
இருந்து இரத்தத்தை உறிஞ்சி, சூதாடிக்கொழுத்தது. அளவுக்கு அதிகமாய்க்
கொழுத்தாலும், மக்களிடம் வாங்கும் சக்திஇன்றி, இரத்தம் உறிஞ்சும் வாய்ப்புக்கள்இன்றி, இரத்தம் உறிஞ்சும் வாய்ப்புகளில்
தடைகள் ஏற்பட்டதால், உள்ளுக்குள்ளேயே வெடித்துச் சிதறியது.
நியூயார்க் நிதி சந்நிதான வெடிப்புவீழ்ச்சி, உலகெங்கும் எதிரொலிக்கிறது. 180
கோடி மக்கள் வேலை, வருமானம்,வாழ்க்கை இழக்கப் போகிறார்கள்.
அமெரிக்காவும் அம்பானியும், அந்தவகையினரும் தம் சுமைகளை, மக்கள்
தோள்களில் சுமத்த முயற்சிக்கிறார்கள்.
சுரண்டலும்
ஒடுக்குமுறையும் தீவிரமடையும்போது, எதிர்ப்பு நிச்சயம் வலுக்கும்
தீவிரமடையும். விரிவடையும்.
உழைக்கும் மக்களின் எதிரிகளும்அவர்களது அரசியல் கட்சிகளும் பலவீன
மடைந்துள்ளனர். கண்ணுக்குப் புலப்படும்வகையில், ஈராக்கில், இலத்தீன் அமெரிக்காவில் தோற்றுக் கொண்டிருக்கிறார்கள்.மற்ற நாடுகளிலும் அளவுரீதியானதாக,கண்ணுக்குப் புலப்படுகிற அவர்களது
மே தின தியாகிகள்

தோல்வி பண்புரீதியாகவும் மாறிக் கொண்டிது. இந்தியாவிலும் தமிழகத்திலும்கூட, ஏகாதிபத்திய எதிர்ப்பு, இறுதி ஆராய்ச்சியில், ஏகாதிபத்திய பெருமுதலாளித்துவஆதரவு வளர்ச்சிப் பாதைக்கெதிரான,
மக்கள் சார்பு வளர்ச்சிப் பாதைக்கானபோராட்டங்களாலேயே தீர்மானிக்
கப்படும்.
ஏகாதிபத்தியத்தின்
விஷம்தோய்ந்த பற்களையும் நகங்களையும்
பிடுங்கி எறிய மே நாளில் உறுதி ஏற்போம்.

மேதினத்
தியாகிகளுக்கு போராட்டஅஞ்சலி செலுத்துவோம். ��
சிறப்புக் கட்டுரை
- குமாரசாமி

0 Responses to மே தின செய்திகள்

About Me

1/10, 11வது தெரு,
கருணாநிதி நகர், அயனாவரம்,
சென்னை - 600 023
தொலைபேசி: 95-44-26743384
மின்னஞ்சல்
maleytheepori@yahoo.com

Followers

;
withdraw the false cases on comrade s.kumarasami and other pricol workers ONLINE PETITIONS [2] CLIK HERE
withdraw the false cases on comrade s.kumarasami and other pricol workers ONLINE PETITIONS [2] CLIK HERE