தமிழகத்தில் 5 தொகுதிகள் போக, கர்நாடகா,உத்தரப்பிரதேசம் மற்றும்
மேற்கு வங்கத்தில் சட்டமன்ற இடைத் தேர்தல்கள்நடந்து முடிந்துள்ளன.
கர்நாடகாவில் 5 தொகுதிகளில் நடைபெற்றஇடைத்தேர்தலில் 2 இடங்களில் பாஜகவும் 2 இடங்களில் மதச்சார்பற்ற ஜனதாதளமும் 1 இடத்தில் காங்கிரசும் வெற்றி பெற்றன.பாஜகவிற்கு தாமரை, தென்இந்தியாவில் முதன்முதலாய், கர்நாடகாவில்தான்மலர்ந்தது. சரியாகச் சொல்வதென்றால், மலர வைக்கப்
பட்டது, எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு கட்சிமாறி, சட்டமன்ற உறுப்பி
னர் பதவிகளை ராஜினாமாசெய்தனர். சுயேச்சைக
ளுக்கு பதவியும் பணமும்தரப்பட்டது.

தாமரைஅப்படித்தான் மலர வைக்கப்பட்டது. இதற்கு ‘ஆப்பரேஷன் கமலா’ (தாமரை)எனப் பெயர் சூட்டப்பட்டது. கோவிந்தராஜ நகர்,சென்னபட்னா, என்ற
இரண்டு தொகுதிகளிலும்,கட்சித் தாவலால், இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
கர்நாடக மக்கள், இந்தஇரண்டு தொகுதிகளிலும்பாஜக வேட்பாளர்களைத்
தோற்கடித்தனர்.

பாஜகவின்வீட்டு வசதித் துறைஅமைச்சர் சோமன்னாதோற்கடிக்கப்பட்டார்.
பதவியில் இருக்கும் அமைச்சர், இடைத் தேர்தலில்தோற்பது, 30 ஆண்டுக
ளுக்குப் பின் நடந்துள்ளது.உத்தரப்பிரதேசத்தில்மாயாவதி தப்பித்துவிட்டார். 4 இடங்களில்நடந்த இடைத் தேர்தலில்,3ல் பகுஜன் சமாஜ் கட்சியும்1ல் அஜித்சிங்கின் இராஷ்ட்ரீய லோக் தளமும் வென்றன. காங்கிரசும் பாஜகவும்,
ஓரிடத்தில் கூட வெற்றிபெறவில்லை. 3 இடங்களையும் பகுஜன் சமாஜ்கட்சி, சமாஜ்வாதி கட்சியிடமிருந்து பறித்துள்ளது.
சமாஜ்வாதி கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சிதாவியதால் இடைத் தேர்
தல்கள் நடந்தன. அனில்அம்பானி போன்ற கொழுத்த பணக்காரர்களின் நண்பராகக் காணப்படும், நம்பகத்தன்மையற்ற எதிர்க்கட்சியாகக் கருதப்படும் முலாயம், தோற்றதில் வியப்பேதுமில்லை. மாயாவதியின்வெற்றிச் செய்தி வந்த அதேநாளில், தேசிய ஊரகவேலை உறுதிச் சட்டஅமலாக்க முறைகேடுகள்
தொடர்பாகக் கேள்விகேட்டதால், தலித் விவசாயக் கூலி கைலாஸ்ராம்(வயது 41) என்பவரை,மாயாவதி கட்சியின் மேல்சாதி (சர்வஜன்) தலைவர்முக்தேஷ்வர் சிங் சாதிப்பெயர் சொல்லி இழிவாகத்திட்டி தாக்கியதற்காகக்கைது செய்யப்பட்ட செய்தியும் வெளிவந்துள்ளது.

மேற்கு வங்கத்தில்சியால்தா, பாவுபஜார் என்றஇரண்டு தொகுதிகளில்இடைத்தேர்தல் நடந்ததுமம்தா மீண்டும் ‘மா, மமதி,மனுஷ்’ (தாய், நிலம்,மக்கள்) என்ற முழக்கத்தைமுன்வைத்தார். வலதுசாரி,இடதுசாரி தோற்றத்துடன்,இடதுசாரி முழக்கங்கள்எழுப்புவது, மீண்டும் வெற்றிகரமாக நடந்தது. இடதுமுன்னணியின், இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் 15,927 வாக்குகள்வித்தியாசத்திலும், இடதுமுன்னணி ஆதரவு பெற்றசுயேட்சை வேட்பாளர்21,527 வாக்குகள் வித்தியாசத்திலும், திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளர்களால்தோற்கடிக்கப்பட்டனர்.இடது முன்னணியின் தலைவரும் மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான பிமன்
போஸ், இரண்டு தொகுதிகளிலும், இடது முன்னணியின் பிரச்சாரம் தாழ்ந்ததளத்தில் இருந்தது என்றும்,பொதுவான அரசியல் வேகம் இருக்கவில்லை என்றும்,இந்தப் பின்னணியில் தேர்தல் முடிவுகளில் ஆச்சர்யப்பட ஏதுமில்லை என்றும்சொன்னார். தாழ்ந்த தளத்தில் ஏன் பிரச்சாரம் இருந்தது,ஏன் பொதுவான அரசியல்வேகம் இல்லை என அந்தப்பெரிய’ தோழரால், குறிப்பான எந்தக் காரணமும்சொல்ல முடியவில்லை.

அமெரிக்கா மற்றும் தீவிரவாதிகளின் சதி என்றுதோழர் பிமன் போஸ்
காரணம் சொல்லவில்லைஎன்ற அளவுக்கு, ஆறுதல்
அடையலாம்!

0 Responses to பிற மாநில சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

About Me

1/10, 11வது தெரு,
கருணாநிதி நகர், அயனாவரம்,
சென்னை - 600 023
தொலைபேசி: 95-44-26743384
மின்னஞ்சல்
maleytheepori@yahoo.com

Followers

;
withdraw the false cases on comrade s.kumarasami and other pricol workers ONLINE PETITIONS [2] CLIK HERE
withdraw the false cases on comrade s.kumarasami and other pricol workers ONLINE PETITIONS [2] CLIK HERE