இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்
- திருவள்ளுவர்

இந்தியக் குடிமக்களில் ஒருவர் கூட
பசியோடு இருக்க அனுமதிக்க மாட்டோம்
- மன்மோகன் சிங், ஆகஸ்ட் 15, 2009.

கடந்த 40 நாட்களில்,ஆந்திராவில் மட்டும் 21விவசாயிகள் கடன்சுமைதாளாமல், வறட்சி வாட்டிவதைக்க தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 1997
முதல் 2007 வரை 1,82,936விவசாயிகள் கடன் சுமையால் தற்கொலை செய்து
கொண்டனர்.
சுழன்றும் ஏர்பின்னது உலகம் அல்லவா?அதனால், மற்ற அரங்கங்களுக்கும், தற்கொலையும்பட்டினிச் சாவும் பரவும்.பீகாரில் பாட்னாவில் இருந்து
50 கிலோமீட்டர் தூரத்தில்உள்ள ஜெகனாபாத்தின்குந்திதேவி சொல்கிறார்.
‘எங்கள் குடும்பத்திற்குரேஷன் பொருள் வாங்கஇளஞ்சிவப்பு டோக்கன்
தரப்பட்டுள்ளது. 1 கிலோரூ.4.96 என 10 கிலோ, ஒருகிலோ ரூ.6.52 என 15
கிலோ கோதுமை வாங்கிக்கொள்ளலாம் எனச் சொல்லப்பட்டது. மே 2008க்குப்
பிறகு எதுவும் தரப்படவில்லை. அதனால் என்கணவர் பசியால், பட்டினி
யால் செத்துப் போய்விட்டார்.’
அவரையும் சேர்த்து ஜெகனாபாத்தில் இதுவரை 3 பேர் பட்டினியால்
இறந்துள்ளனர்.மகாராஷ்ட்ரா மக்கள்பன்றிக் காய்ச்சலைக் காட்டிலும் வறட்சிக்கு அஞ்சுகிறார்கள்.
34 மாவட்டங்களில் 22 மாவட்டங்களில்வறட்சி. உத்தரபிரதேசத்தின்
71 மாவட்டங்களில் 58ல்வறட்சி. ஆந்திராவில் 21மாவட்டங்களில் வறட்சி.
பீகாரின் 26 மாவட்டங்களில்வறட்சி. 3ல் வெள்ளம்.ஒரிசாவில் மக்கள் வறட்சி
காரணமாக வேறு மாநிலங்களுக்குப் பஞ்சம் பிழைக்கச்செல்லத் துவங்கிவிட்டனர்.
ஜார்கண்டையும் வறட்சிவிட்டு வைக்கவில்லை.இந்தியாவின் மூன்றில்
ஒரு பங்கு மக்கள் தொகைகொண்ட, மகாராஷ்டிரா,மத்தியப்பிரதேசம், சட்டிஸ்
கர், கர்நாடகா மற்றும்ஆந்திராவில்தான் மூன்றில்இரண்டு பகுதி விவசாயக்
கடன் தற்கொலைகள் நடந்துள்ளன. இப்போது நிலைமை மேலும் மோசமாகிறது.
ஜார்கண்டின் சத்ரபூர்ஒன்றியத்தைச் சேர்ந்தபத்திரிகையாளரான அருண்
குமார் சிங் சொல்கிறார்:
‘வறட்சி போக்கும் வளர்ச்சிப் பணிகள் எல்லாம்,பெரும் மோசடிகளே. நீர்ப்
பாசன வசதி பெருக்க ஏரிகள் வெட்டுகிறோம் எனக்கோடி கோடியாய் செலவுக்
கணக்கு காட்டப்பட்டுள்ளது. ஏரிகள் காகிதத்திலும்ஆகாயத்திலும்தான் இருக்
கின்றன.

பூமியில் இல்லை.ஊழல் அரசியல்வாதிகள்,அதிகாரிகள், மேட்டுக் குடியினர் எல்லாவற்றையும்விழுங்கி விட்டனர்.’ பக்கத்தில் இருந்த 67 வயது வறியவர் பல்மோகன் சிங் சொல்கிறார்: ‘10 பிகா நிலம் இருக்கிற, சர்வ சாதாரணமாய்
மாதம் ரூ.10,000த்துக்கும்மேல் சம்பாதிக்கிற பெரியமனிதர்களுக்கு வறுமைக்
கோட்டிற்குக் கீழுள்ளவர்கள் அட்டை கிடைக்கிறது.என் போன்ற வறியவர்களுக்கு இல்லை.’குறைந்த விளைச்சல்,உணவுப்பொருள் தட்டுப்பாடு, இவைதான் எல்லாப்
பிரச்சனைகளுக்கும் காரணமா? விளைச்சல் கொட்டிக்குவிந்த, கிட்டங்கிகள் நிரம்பி
இருந்த காலங்களிலும்,உணவுத் தட்டுப்பாடு, விலைஉயர்வு இருந்தது. இப்போது
வறட்சி பிரச்சனையைத்தீவிரப்படுத்தியுள்ளது.
அமர்த்யா சென் போன்றஅறிஞர்கள், வறட்சி, பஞ்சம்போன்ற காலங்களிலும்
அடிப்படைப் பிரச்சனை,மக்களிடம் வாங்கும் சக்திஇல்லாததுதான் என்று
சொல்லும் வாதம் சரியானதே. சென்குப்தா குழு, 77சத இந்தியர்களின் சராசரி
அன்றாட வருமானம்ரூ.20க்கு கீழ் என்கிறது.

இந்த மக்களுக்கு, உணவுதான்யங்கள் மிதமிஞ்சிவிளைந்தாலும், மூன்றுவேளை சாப்பாடு, உடை,இருப்பிடம், கல்வி, மருத்துவம் என்ற சாதாரண மானுட
வாழ்க்கை கிடையாது.தேசிய புள்ளி விவர ஆய்வுஅமைப்பு, வறுமைக் கோட்டிற்கு கீழே இருப்போர் 22சதம் எனும்போது மிகச்சுலபமாக, சென்குப்தாகுறிப்பிடும் வறியவர்களில்
55 சதம் பேரை, கண்கட்டுவித்தையாய், வறியவர்பட்டியலில் இருந்து நீக்கிவிடுகிறது. வறுமை எதிர்ப்புப் போர்கள் எல்லாம், நிஜவாழ்க்கையில் வறியவர்எதிர்ப்புப் போர்களாகவேமாறி உள்ளன.

நாடாள்பவர்கள் நமக்குஎன்ன சொல்கிறார்கள்?

நாடெங்கும் உள்ளஏறத்தாழ 600 மாவட்டங்களில், 252 மாவட்டங்கள்வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன என மத்திய அரசு
18.08.2009 அன்று அறிவித்தது. சரத்பவார் 1 கோடி
டன் விளைச்சல் குறையும்எனச் சொல்லி, கள்ளச்சந்தையும் பதுக்கலும்
‘ரொம்ப மோசம்’ என்றார்.அவர், உணவுப் பொருட்களில் நடக்கும் ஊக வர்த்தகம் பற்றிப் பேசக்கூடத்தயாரில்லை. தடை பற்றியோசிக்கவா போகிறார்?
மத்திய அரசு 2 தீர்வுகளைமுன் வைக்கிறது.

1. உணவுப்பொருட்கள் பற்றாக்குறையைப் போக்க இறக்குமதியில்ஈடுபட்டாக வேண்டும். ஆனால்இது பற்றி அதிகம் பேசாமல்
இருப்போம், வெளியில் தெரிந்து விட்டால், சர்வதேசஉணவுப் பொருள் வர்த்தகர்கள் தாறுமாறாக விலையைஉயர்த்தி விடுவார்கள்
2. மழைஇல்லாமல் விளைச்சல் குறைந்துள்ளது. நீர்ப்பாசனம் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் தண்ணீர் தேவைப்படாத மாற்றுப்பயிர்களுக்கு மாறுவது, மிக
மிக நல்லது. பாதகத்தைச்சாதகமாக்கி, துன்பத்தைஇன்பமாக்கி கொள்ளச்
சொல்கிறது. பசிப்பயிரில்இருந்து பணப்பயிருக்குமாறச் சொல்கிறது. மத்திய
அரசு சொல்லும் இந்த இரண்டு தீர்வுகளுமே மக்கள்விரோதத் தன்மை வாய்ந்
தவை. உள்நாட்டு வெளிநாட்டு வசதி படைத்தவர்களுக்குச் சாதகமானவை என்பது
சாமான்யர்களுக்கும் சுலபமாகப் புரியும்.

எது முடியவே முடியாது
என்கிறார்கள்?

நாடெங்கும் பஞ்சம்பட்டினியில் இருந்து மக்கள்பிழைக்க தேசிய ஊரக வேலை உறுதிச்சட்ட வேலைநாட்களை 100ல் இருந்து 150அல்லது 180 நாட்கள் என
ஏன் உயர்த்தக் கூடாது எனநிதி அமைச்சர் பிரணாப்முகர்ஜியிடம் கேட்கப்பட்டது. அவர்தான், அதிகாரம்வழங்கப்பட்ட அமைச்சர்குழுவின் தலைவர் ஆவார்.
பிரணாப் முகர்ஜி 100 நாட்களை உயர்த்தும் பேச்சுக்கேஇடமில்லை எனத் திட்டவட்டமாக அறிவித்தார்.அதனோடு கூடவே, நாங்கள் வேலை அளிக்க முன்வந்து, வேலை செய்ய ஆளில்லாமல் போனால் என்னசெய்வது என்றும் கேட்டார்.
வேலை செய்ய ஆள்வரவில்லையா? வேலை தரப்படவில்லையா?
2008-2009ல் வேலைஅட்டை வழங்கப்பட்டகுடும்பங்கள் 7,40,85,603.
அதில் 2,34,41,103 குடும்பங்களுக்கு மட்டும் வேலைதரப்பட்டது. 100 நாட்கள்
வேலை தரப்படவில்லை.சராசரியாய் 37.44 நாட்களுக்கே தரப்பட்டது. அட்டை
தரப்பட்டவர்களில் மூன்றில்ஒருவர்க்குதான் வேலைதரப்பட்டது. 40 நாட்கள்
கூட தரப்படவில்லை. சராசரியாய் வேலை தரப்பட்டகுடும்பங்கள் அதிகபட்சம்
ஓராண்டில் ரூ.3200 (ரூ.80 ஷ்40) மட்டுமே சம்பாதித்திருக்க முடியும். இப்போது
நாடெங்கும் பேரூராட்சி,மாநகராட்சி பகுதிகளுக்கும்இத் திட்டம் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.குடும்பத்தில் இரண்டு பேருக்கு, ஆண்டில் தலா 200நாள் வேலை, ரூ.200 கூலிஎன்ற கோரிக்கை, வறட்சி,
பஞ்சம், பட்டினி என்ற பிரச்சனைகளுக்கு அடிப்படையான தீர்வாக இருக்க முடியும். ஆனால் அதில் மட்டும்கை வைக்க முடியாது என்றுபிடிவாதமாக சொல்லும்
பிரணாப் முகர்ஜி, மக்கள்கூடுதல் வேலை நாட்களுக்கு வருவார்களா என்ற
கேள்வி இருப்பதால்தான்150 நாட்கள் என மாற்றமுடியாது என மக்கள் மீதே
பழி போடுகிறார்.

‘நீதியின் வறட்சியும்
நிதியின் வெள்ளமும்’

இந்தத் தலைப்பில்பிரபல பத்திரிகையாளர்சாய்நாத், இந்து நாளேட்டில்
ஒரு கட்டுரை எழுதி உள்ளார். விவசாயிகள் கடன்தள்ளுபடி ரூ.60000 கோடிக்கு மேல் என முடிவெடுத்தபோது முறையற்ற நிதிச்செலவு, பொருளாதார நாசம்
எனச் சாபமிட்டவர்கள்,கார்ப்பரேட் உலகிற்கு,அதாவது அம்பானி, மிட்டல்
பங்குச் சந்தை ஊக வணிகர்கள், சூதாடிகள், அந்நிய நிதிநிறுவனங்கள் போன்றோருக்கு, வாரி வழங்கினால்மட்டும் வாழ்த்தி வரவேற்பது ஏன் எனக் கேள்வி
எழுப்புகிறார்.
2009-2010பட்ஜெட்டில் உணவுமான்ய ஒதுக்கீடு ரூ.43,688கோடி. தேசிய ஊரக
வேலை உறுதிச் சட்ட ஒதுக்கீடு ரூ.39,100 கோடி. விவசாயம், விவசாயம் சார்ந்த
நடவடிக்கைகளுக்கு ஒதுக்கீடு ரூ.10,629 கோடி. ஊரகவளர்ச்சி ஒதுக்கீடு ரூ.51,769
கோடி. நீர்ப்பாசனம்,வெள்ளக் கட்டுப்பாடு ஒதுக்கீடு ரூ.439 கோடி. மொத்தத்தில் 2009-2010 கிராமப்புற மேம்பாட்டிற்கு ஒதுக்கீடு ரூ.62,837 கோடி. இந்த
3 வகையினங்களில், அதாவது, உணவு மான்யம்,கிராமப்புற மேம்பாடு,
வேலை உறுதி என்பவற்றிற்கு ரூ.1,45,625 கோடிஆகும். 100 பெரும் பணக்காரர்களும் நிறுவனங்களும்செய்துள்ள வருமான வரிஏய்ப்பு மட்டும் ரூ.1.41,000கோடி. பெரும் பணக்காரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளநேரடி மறைமுக வரி தள்ளுபடி, சலுகை, குறைப்பு
மட்டும் மிகமிகக் குறைவாகமதிப்பிட்டால் ரூ.4,38,000கோடி வரும்.
ஒரு நாளில் 24 மணிநேரம். ஓராண்டில் 365 நாடகள், ஓராண்டில் 8760 மணி
நேரம். நிதியின் வெள்ளம்,சலுகை என்ற பெயரால், வசதிபடைத்தவர்களுக்கு ஒரு
மணி நேரத்தில் ரூ.50 கோடிபாய்கிறது. ஒரு நாளில் ரூ.1200கோடி பாய்கிறது.

100 நாள் வேலையை200 நாள் என உயர்த்தி ஒருகுடும்பத்தில் இருவர்க்கு,
ஆளுக்கு ரூ.200 கூலி கொடுத்தால், தாய், தந்தை, இருபிள்ளைகள் கொண்ட ஒரு
குடும்பம் ஓராண்டில்ரூ.80,000 சம்பாதிக்கும்.நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா மூன்று
பேர் கொண்ட ஒரு மத்தியஅரசு ஊழியர் குடும்பத்துக்கு, (பணியில் சேரும்போது) ஒரு மாதம் குறைந்தபட்சத்திற்கு ரூ.7000 செலவாகும் என்கிறார். அந்த
வகையில் குறைந்தபட்ச சம்பளம், ஒருவர் வேலை செய்தாலே, ஆண்டில் ரூ.84,000
தேவை. தேசிய ஊரகவேலை உறுதிச் சட்டத்தின்இப்போதைய நிலையில், 100
நாட்களும் வேலை தந்தால்ஆண்டில் ஒரு குடும்பத்திற்கு ரூ.10,000தான் கிடைக்கும். 4 பேர் கொண்டகுடும்பம் என்றால் அரசுசெலவு ஒருவர்க்கு ஆண்டுக்கு ரூ.2500தான் ஆகும்.

இங்கேதான் தவறான திசையில் நிதி வெள்ளம் எனபபாய்வதால், சரியான திசையில் நீதியின் வறட்சி ஏற்படுகின்றது. வேலை கோரிபதிவு செய்யப்பட்ட ஏழரை
கோடி அட்டைகளில், மத்திய அரசு வாக்குறுதியின்படிரூ.100 கூலியில், 100 நாட்கள்
வேலை தர ரூ.75,000 கோடிஒதுக்க வேண்டும். ஆனால்,ரூ.39,100 கோடி மட்டும்
ஒதுக்கப்படும்போது, வாக்குறுதி காலில் போட்டு மிதிக்கப்படுகிறது.

அனைவர்க்கும் வேலை வேண்டும்!
அனைவர்க்கும் உணவு வேண்டும்!

50 கிலோ அரிசி கிலோரூ.2 எனத் தருவதற்கும்,எல்லா உணவுப் பொருட்களையும் ரேஷன் முறையில்தருவதற்கும், நாம் கோரும்
விதம், நிலம், வேலை, கூலி,வீட்டுமனைப்பட்டா ஆகியவற்றை நிறைவேற்றுவதற்குமான ஆற்றல், இச்சமூகத்திலேயே இருக்கிறது.
ஆனால் அது யதார்த்தமாவதில்லை. அது தடுக்கப்படுகிறது. சமூகமே உற்பத்தியில்
ஈடுபட்டு உருவாக்கும், பிரம்மாண்டமாய் மலையெனக்குவியும் செல்வங்கள், தனி
உடைமையிடம், ஒரு சிலர்கைகளில் சிக்கிக் கொள்வதால், அரசுகள் அவர்களது
எடுபிடிகளாக செயல்படுவதால் வறுமை, வேலையின்மை, மருத்துவமின்மை,
கல்வியின்மை கடலெனப்பெருகியுள்ளது

பஞ்சத்திலும் நோய்களி
லும் பாரதர் புழுக்கள் போல்
துஞ்சத் தம் கண்ணாற்
கண்டும் - கிளியே
சோம்பிக் கிடப்பாரடீ
தாயைக் கொல்லும்
பஞ்சத்தைத் தடுக்க முயற்சியுறார்
வாயைத் திறந்து சும்மா
- கிளியே
வந்தே மாதரமென்பார்
- பாரதி


பெருமுதலாளித்துவ,ஏகாதிபத்திய சார்பு வளர்ச்சிப் பாதைக்கு எதிராக,
மக்கள் சார்பு வளர்ச்சிப்பாதைக்காக, தீவிரமானஎதிர்ப்பு இயக்கங்களை
விரிந்த அளவில் கட்டியாகவேண்டும். இன்றைய சமூக
அமைப்பு, அரசியல் அதிகாரம், வசதி படைத்தவர்களுக்கானது. நமது எதிர்ப்புப்
போராட்டங்கள், மக்களஜனநாயகம், உழைக்கும்மக்கள் அரசியல் அதிகாரம்,
அதனூடே சோசலிசம் என்றதிசைவழியில் பயணம் செய்தாக வேண்டும்.

0 Responses to தனியொரு மனிதனுக்குணவிலை யெனில் ஜெகத்தினை அழித்திடுவோம்!

About Me

1/10, 11வது தெரு,
கருணாநிதி நகர், அயனாவரம்,
சென்னை - 600 023
தொலைபேசி: 95-44-26743384
மின்னஞ்சல்
maleytheepori@yahoo.com

Followers

;
withdraw the false cases on comrade s.kumarasami and other pricol workers ONLINE PETITIONS [2] CLIK HERE
withdraw the false cases on comrade s.kumarasami and other pricol workers ONLINE PETITIONS [2] CLIK HERE