அகில இந்திய முற்போக்குபெண்கள் கழகத்தின் முதல்மாநில மாநாடு மதுரையில்செப்டம்பர் 12 அன்று நடைபெற்றது. 14 மாவட்டங்களில் இருந்து
500க்கும் மேற்பட்ட பெண்கள்கலந்துகொண்டனர்.
தோழர்கள் மஞ்சு, அஜந்தா,ஜீதா ஆகியோர் நினைவால்பெயரிடப்பட்டிருந்த மாநாட்டுஅரங்கை நோக்கி பேரணிநடந்தது. இந்தப் பேரணியை,
அகில இந்திய முற்போக்குபெண்கள் கழகத்தின் அகில இந்திய தலைவர் தோழர் ஸ்ரீலதாசாமிநாதன் துவக்கி வைத்தார்.
விலை உயர்வுக்கு எதிராகவும்மத்திய மாநில அரசுகளின் முதலாளித்துவ, ஏகாதிபத்தியசார்புவளர்ச்சிப்பாதைக்குஎதிராகவும்முழக்கங்கள்எழுப்பப்பட்டன.
மாநாட்டில் தோழர் குப்பாபாய் கொடியேற்றினார். தோழர்தேவகி தலைமையில் 13 பேர்கொண்ட தலைமைக் குழு மாநாட்டுக்கு தலைமை தாங்கியது.

அகிலஇந்தியமுற்போக்குபெண்கள்கழகத்தின்அகிலஇந்தியபொதுச்செயலாளர்தோழர் மீனா திவாரி மாநாட்டைதுவக்கிவைத்து உரையாற்றினார். பெண்களே உலகமயத்தாக்குதல்களின் விளைவுகளை


பெருமளவில் எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்று கூறியதோழர் மீனாதிவாரி, தமிழகத்தில் அகில இந்திய முற்போக்குபெண்கள் கழகம் மிகப் பெரியபெண்கள் அமைப்பாக எழவேண்டும் என்றார்.
தோழர் தேன்மொழி மாநாட்டு அறிக்கையை முன்வைத்தார். அறிக்கை மீது மாநாட்டில்கலந்துகொண்ட பெண்கள் கருத்து தெரிவித்தனர். இலவச வண்ணத் தொலைக்காட்சி, இலவசசமையல் எரிவாயு அடுப்புவழங்குவதாக சொல்லிக் கொள்ளும் கருணாநிதி, வேலையோ,செய்த வேலைக்கு கூலியோதருவதற்கான உத்தரவாதங்களை ஏற்படுத்தவில்லை என்றும், இதற்கெதிராக பெண்கள்போராடும்போது, துப்பாக்கிச்சூடும், தடியடியுமே பதிலாகஇருக்கிறது என்றும், இது போன்றநிலைமைகளுக்கு எதிராகபெண்கள் பெருமளவில் திரண்டுபோராட்டங்களை முன்னெடுக்க
வேண்டும்என்றும்,இந்தியஆட்சியாளர்களின்அமெரிக்கஅடிமைத்தனத்துக்கு எதிராகபெண்கள் போராட்டங்கள் வலுக்க வேண்டும் என்றும் கருத்துக்கள் முன்வந்தன. இந்த விவாதங்கள் மீது தோழர் தேன்மொழிதொகுப்புரைவழங்கினார்.
அறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது.அகில இந்திய முற்போக்குபெண்கள் கழகத்தின் அகிலஇந்திய தலைவர் தோழர் ஸ்ரீலதாசாமிநாதன், தேசிய ஊரக வேலைஉறுதித் திட்டத்தில் ரூ.100க்குக்குறைவான கூலியை ஒருபோதும்
ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றும், அதற்காக தீவிரமாகப்போராட வேண்டும் என்றும்,தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில், வேலை அட்டைபெற்றுள்ள ஒவ்வொரு குடும்பமும் வறுமைக் கோட்டுக்குக் கீழ்
உள்ளோர் பட்டியலில் இணைக்கப்பட வேண்டும் என்றும், வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளோருக்கு வழங்கப்படும் அனைத்து
நல்வாழ்வு திட்டங்களும், அவர்களுக்கு நீட்டிக்கப்பட வேண்டும் என்றும், இவற்றை உறுதிசெய்ய அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் தீவிரமானபோராட்டங்கள் நடத்த வேண்டும்என்றும், தமிழ்நாட்டில் அகில
இந்திய முற்போக்கு பெண்கள்கழகம் மிகவும் வலுவான பெண்கள் அமைப்பாக எழ வேண்டும்என்றும் அழைப்பு விடுத்தார்.மாலெ கட்சி மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம்,மாநில நிலைக்குழு உறுப்பினரும், அனைத்திந்திய விவசாயதொழிலாளர் சங்கத்தின் மாநிலப்பொதுச் செயலாளருமான தோழர்ஜானகிராமன், ஏஅய்சிசிடியுமாநில துணைப் பொதுச் செயலாளர் தோழர் புவனேஸ்வரி, செவிலியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் நிர்மலா ஆகியோர்வாழ்த்துரையாற்றினர்.
மாநாட்டில் 21 பேர்கொண்ட மாநிலப் பொதுக் குழுதேர்ந்தெடுக்கப்பட்டது.

தோழர்தேன்மொழி மாநிலத் தலைவராகவும், தோழர் உஷா மாநிலப்
பொதுச்செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


0 Responses to அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தின் முதல் மாநில மாநாடு

About Me

1/10, 11வது தெரு,
கருணாநிதி நகர், அயனாவரம்,
சென்னை - 600 023
தொலைபேசி: 95-44-26743384
மின்னஞ்சல்
maleytheepori@yahoo.com

Followers

;
withdraw the false cases on comrade s.kumarasami and other pricol workers ONLINE PETITIONS [2] CLIK HERE
withdraw the false cases on comrade s.kumarasami and other pricol workers ONLINE PETITIONS [2] CLIK HERE