‘தோழமை விவாதம்’

Posted by orumaipadu mandram Sep 25, 2009

தீக்கதிர் நாளேட்டில்17.08.2009 அன்று, இந்தியகம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்டின்) பொதுச் செயலாளர் தோழர் பிரகாஷ் காரத்,நோபல் பரிசு பெற்ற
திரு.அமர்த்யா சென்னுடன்ஒரு ‘தோழமை விவாதத்தில்’ ஈடுபட்ட கட்டுரைபிரசுரமாகி உள்ளது. மார்க்சிஸ்ட் கட்சியுடன், நாமும்ஒரு தோழமை விவாதத்தில்ஈடுபட வேண்டி உள்ளது.
விவாதத்தின் துவக்கத்திலேயே, அமர்த்யா சென்னுடன் தோழமை விவாதமஎப்படிச் சாத்தியம் என்றகேள்வியை எழுப்ப வேண்டியுள்ளது. அமர்த்யா சென்ஏகாதிபத்திய எதிர்ப்பாளரா?நில உடைமை மிச்ச சொச்சங்களை முழுமையாக ஒழிக்கக் குரல்கொடுக்கும் ஜனநாயகவாதியா? சுதந்திரமானஇடதுசாரி அரசியலின் ஆதரவாளரா? இந்தக் கேள்விகளுக்கு ஆமாம் என்ற பதில்இருந்தால் அவரோடு தோழமை விவாதம் சாத்தியம்.
பதில் இல்லை என்று இருந்தால் அவரோடு விவாதம்சாத்தியமே தவிர, தோழ
மை விவாதம் சாத்தியமேஅல்ல.
அமர்த்யா சென், வறுமை, கல்வியின்மை, பொதுசுகாதாரம் பற்றிக் கவலைப்படுபவர். அதனால் தோழமை விவாதம் என்றால், பில்கேட்சுடனும் இன்போசிஸ்நாராயண மூர்த்தியுடனும்கூட தோழமை விவாதத்தில்ஈடுபட வேண்டும். அமர்த்யாசென் தம்மை ஒரு இடதுசாரியாக, இடதுசாரி நண்பராகக் குறிப்பிட்டு விவாதத்தில் ஈடுபடுவதாய், அவரோடு தோழமை விவாதம்எனப் பிரகாஷ் காரத் சொல்வதை ஏற்றுக் கொண்டால்,
இடதுசாரி கட்சிகளுடன்சகஜ உறவு இருக்கும் நேரங்களில் எல்லாம் தம்மை ஓர்இயல்பான இடதுசாரி என்றுஅழைத்துக் கொள்ளும்கருணாநிதியுடன் கூடதோழமை விவாதம் நடத்தவேண்டியிருக்கும்.அமர்த்யா சென் ஏகாதிபத்திய உலகமயத்திற்குமனிதமுகம் கொடுக்கமுயற்சிப்பவர்களில் ஒருவர்.அடிபட்டு விழுபவர்களுக்குபாதுகாப்பு வலை பற்றிப்பேசுபவர்.
அந்த பாதுகாப்புவலையில் கிட்டத்தட்டகயிறே இருக்காது, ஓட்டைகள்தான் நிறைந்திருக்கும்எனத் தெரிந்திருந்தும், பாதுகாப்பு வலை பற்றி நிறையப்பேசுபவர்.முதலாளித்துவம் அடிமுதல் முடிவரை இரத்தம்தோய்ந்து பிறந்துஎழுந்துவளர்ந்து வரும் காலம்நெடுக, முதலாளித்துவத்தைஅதன் இன்றைய வளர்ச்சியான ஏகாதிபத்தியத்தைஅழகுபடுத்தும் முயற்சிகளில்ஈடுபட்ட பலர் வரிசையில்,இவரும் ஒருவர்.
இந்த அரியபணிக்காக நோபல் பரிசுபெற்றவர். இடது முன்னணிஅரசாங்கங்களின், வலதுசாரிஅதி விரைவு பயண மைல்கற்களான நந்திகிராம்,சிங்கூர் தொடர்பாக விமர்சனம் செய்தவர்களை எல்லாம் இடதுசாரி எதிர்ப்பாளர்கள், மாபெரும் ஏகாதிபத்திய சதியின் அங்கம்என்றெல்லாம் முத்திரைகுத்திய மார்க்சிஸ்ட் கட்சியினர், அமர்த்யா சென்னிடம் தோழமை பாராட்டுகின்றனர். அதில் வியப்பேதுமில்லை என்பதைப் பின்னர்பார்ப்போம்.

முதலில், அமர்த்யாசென் - பிரகாஷ் காரத்விவாதத்தைக் காண்போம்.
அமர்த்யா சென், தாம் பலமுறை சொல்லியிருப்பதுபோல், இந்தியாவில் இடதுசாரிகள்,சமூக நீதி மற்றும்இதர மய்யமான பிரச்சனைகளில் கவனம் செலுத்து
வதை விட்டு விட்டு,இந்திய இறையாண்மைகுறித்து, இந்திய அமெரிக்கஅணு ஆற்றல் ஒப்பந்தம்ஆகியவற்றுக்கே அழுத்தம்வைக்கின்றனர் என லண்டனில் பேட்டி தந்தார். அது
பற்றித்தான் பிரகாஷ் காரத்பேசுகிறார்.அமர்த்யா சென் சொல்வதில், கல்வி, பசி, ஊட்டச்
சத்து ஆகிய பிரச்சனைகளில்,மேற்கு வங்கத்திலும் அகிலஇந்திய அளவிலும் கூடுதல்
கவனம் செலுத்துவோம்என பிரகாஷ் காரத் பதில்சொல்கிறார். விமர்சனம்இந்த விஷயத்தில் ஏற்கப்படுகிறது.
இது கூட, காலாகாலமாய், முதலாளித்துவ மனிதநேயம் போதிக்கும் உபதேசங்கள்.இடதுசாரி நிகழ்ச்சிநிரலான, நிலம், வேலை,கூலி, உழைப்பவர் அதிகாரம் ஆகிய பிரச்சனைகள்விவாதத்திற்குள் நுழையாதவை.
அமர்த்யா சென்னின்ஏகாதிபத்தியம் தொடர்பான பார்வையை பிரகாஷ்காரத்பின்வருமாறு தெளிவுபடுத்துகிறார்:
அமர்த்யாசென், ஏகாதிபத்திய அச்சுறுத்தல் என்பது ஒரு கடந்தகாலப் பிரச்சனை எனக் கருதுகிறார். ஏகாதிபத்தியத்தால்இயக்கப்படும் உலகமயம்,தனது இருபெரும் ஆயுதங்களான, புதிய தாராளமயக்கொள்கைகள் மற்றும் இராணுவத் தலையீடு கொண்டுசெயல்படுவது, சமூக நீதிபோன்ற பிரச்சனைகளோடுதொடர்புடையதல்ல எனடாக்டர் சென் கருதுகிறார்.

அமர்த்யா சென்னின் அடிப்படைத் தவறுகள் பற்றிபிரகாஷ் காரத் சுட்டிக்காட்டுகிற விஷயங்கள் சரிதான். ஏகாதிபத்திய, பெருமுதலாளித்துவ சார்பு வளர்ச்சிப் பாதை, சமூகத்தில்வாழும் ஏகப்பெரும்பான்மை மக்களுக்கு நீதி மறுக்கும். ஏகாதிபத்திய விசுவாசமும், மக்களுக்கு நீதி மறுப்பதையும் பிரித்துப் பார்க்கமுடியாது. இரண்டுமே
எதிர்க்கப்பட வேண்டும்.
பிரகாஷ் காரத்,காங்கிரஸ் தலைமையிலானஅய்முகூ அரசாங்கத்துடன்,இந்திய -அமெரிக்க பாதுகாப்பு வரையறை ஒப்பந்தம்கையெழுத்தான ஜøன்2005லேயே மோதல் துவங்கிவிட்டது என்றும், அதுதர்க்கரீதியாக, இந்தியஅமெரிக்க அணு ஆற்றல்தொடர்பான வாக்கெடுப்பிற்குப் பின், ஆதரவைவிலக்கிக் கொள்ளும் முடிவுக்கு இட்டுச் சென்றது என்றும் குறிப்பிடுகிறார். தாம்ஆதரவு தந்த காலங்களில்,தாம் தந்தநிர்ப்பந்தத்தால்தான், மக்கள் விரோதநடவடிக்கைகளின் வேகம்மட்டுப்பட்டது என்றும்,ஆதிவாசிகளின் வன உரிமைகள் தொடர்பான சட்டம்,தேசிய ஊரக வேலைஉறுதிச் சட்டம் போன்றவைஎல்லாம், நாடாளுமன்றத்திற்கு உள்ளும் வெளியும்தாம் எடுத்த போராட்டங்களால்தான் நிறைவேறினஎன்றும் வாதாடுகிறார். ஆக
சமூக நீதி வகைப்பட்டமக்கள் பிரச்னைகளில் தாம்ஈடுபடவில்லை என்ற அமர்த்யா சென்னின் கருத் துக்கள் தவறானவை என்கிறார்.
இவற்றை நாம் ஒவ்வொன்றாகப் பார்ப்பதுநல்லது. அமெரிக்காவுடனான போர்த்தந்திர உறவுஜøன் 2005லேயே வலுப்பெறத் துவங்கிவிட்டது.இந்திய - அமெரிக்க அணுஆற்றல் ஒப்பந்தம் கூடஓரிரவில் கையொப்பமிடப்படவில்லை. மன்மோகன்
அரசைத் தப்பிக்கவிட்டது,
அதுவும் ஆரம்பகட்டத்தில்கூடுதலான வாய்ப்புக்கள்இருந்தபோது தப்பிக்கவிட்டது, ஏகாதிபத்தியஎதிர்ப்புக்கான மிக முக்கியப் பிரச்சனையில் வாய்ப்புகை நழுவிய பிறகு, தாமதமாக எதிர்ப்பு தெரிவித்ததுதான் நாடாளுமன்ற இடதுசாரிகள் செய்த தவறு என்பதைத் தோழர் பிரகாஷ்காரத் காணத் தவறுகிறார்.விவாதமா, வாக்கெடுப்பா
என்பதில், விவாதம் எனத்தேர்வு செய்து, அய்முகூஅரசு ஆரம்ப கட்டத்தில்தப்பிக்க விட்டதை காணமறுக்கிறார். அமர்த்யா சென்னுடனான விவாதம் என்ற
விதத்தில், தோழர் பிரகாஷ்காரத், இந்திய அரசின்அமெரிக்க அடிவருடித்தன்மையை எதிர்ப்பதில்தமது கட்சியின் ஊசலாட்டத்தை, பலவீனமான சம்பிரதாய ஏகாதிபத்திய எதிர்ப்பை, மறைக்கவோ மறுக்கவோ முடியாது.

வேலை உறுதிச் சட்டம், வன உரிமைகள் சட்டம் போன்றவற்றில், நாடெங்கும் உள்ள மக்களுக்கும்,இடது முன்னணியில் அங்கம்வகிக்காத இடதுசாரி இயக்கங்களுக்கும், இகக, இகக(மா) போன்ற அனைவர்க்கும் பங்கு உண்டு. பிரகாஷ்காரத் சொல்வது சரிதான்.ஆனால், ஆளும்வர்க்கங்களும் அவர்களதுஅரசியல் கட்சிகளும் ஒடுக்குமுறைமூலம் மட்டுமேஆள முடியாது, சில சீர்திருத்த சலுகை நடவடிக்கைகளில் ஈடுபட்டே ஆகவேண்டும் என்பதை நாம்காணத் தவறக் கூடாது.இங்கேயும் கூட ஒரு முக்கியமான அரசியல் கேள்விஎழுகிறது. மக்கள் இந்த
சீர்திருத்தங்களை, உங்கள்நிர்ப்பந்தத்தால் விளைந்தவை எனக் கண்டார்களாஅல்லது சந்தேகத்தின் பயனை காங்கிரசுக்கு அளித்தனரா? ஓர் அரசியல் கட்சி
என்ற முறையில், இப்பிரச்சனையில் தோழர் பிரகாஷ்காரத் கவனம் செலுத்துவது
தான் நல்லது.

சிறப்புப் பொருளாதாரமண்டல சிற்பியான காங்கிரஸ் தப்பித்தது. நந்திகிராமில், சிங்கூரில் அமல்படுத்திய இடது முன்னணி அடிவாங்கியது. அவப்பெயர்கொண்டநடவடிக்கைகளுக்கு, இறுதி ஆராய்ச்சியில்,
நீங்கள் பொறுப்பானீர்கள்.
அரைமனதோடு மேற்கொண்ட அரைகுறை நல நடவடிக்கைகளுக்கு, வெற்றிகரமாககாங்கிரஸ் சொந்தம்கொண்டாடியது. இதுஉங்கள் வால் பிடிக்கும்அரசியல்வழிக்கு, நீங்கள்தந்த அரசியல் விலை எனக்கருத முடியாதா?
தோழர் பிரகாஷ் காரத்திடம் கேட்க வேண்டியவேறு கேள்விகளும் நமக்குஉண்டு. நீங்கள் தந்த நிர்ப்பந்தம், உங்கள் ஆதரவு இருந்த காலம், அப்போது நிறைவேற்றப்பட்ட நல நடவடிக்கைகள் மீது நீங்கள் சொந்தம் கொண்டாடுகிறீர்கள்.அய்முகூ அரசாங்கம் மேற்கொண்ட பெட்ரோல், டீசல்விலை உயர்வு, பொதுவானவிலைஉயர்வு, பெருமுதலாளித்துவ வளர்ச்சிப் பாதை,ஆகியவற்றுக்கெல்லாம் யார்சொந்தம் கொண்டாடுவது?நீங்கள் நேரடியாக அல்லாதமுறையில் மத்திய அரசில்பங்கு பெறவில்லையா? உங்கள் கட்சிக்காரர்தானே சபாநாயகர்? உங்கள் கட்சியும்காங்கிரசும்மட்டும்தானேஒருங்கிணைப்புக்குழு வைத்திருந்தன? (மற்ற அய்முகூகூட்டாளிகளுடன் அல்லாமல் உங்களுடன் மட்டும்காங்கிரஸ் ஒருங்கிணைப்பு
கொண்டிருந்ததில் உங்களுக்கு இரகசியப் பெருமைவேறு இருந்தது).

இவை எல்லாவற்றையும் காட்டிலும் ஒரு மாபெரும் வரலாற்றுக் களங்கத்தை நீங்கள் சுமக்கிறீர்கள்.நீங்கள் ஆதரவளித்த காலத்தில்தான், சட்டவிரோதநடவடிக்கைகள் தடுப்புசட்டம், சிறப்பு பொருளாதார மண்டலச் சட்டம் 2005ஆகிய இருபெரும் மக்கள்விரோதச் சட்டங்கள், உங்கள் தரப்பில் இருந்து எந்தஎதிர்ப்புமின்றி நிறைவேற்றப்பட்டன. இது பற்றிஇன்று வரை உங்கள் தரப்பில் இருந்து எந்த விளக்கமும், நாட்டு மக்களுக்கும்இடதுசாரி அணிகளுக்கும்
தரப்படவில்லை.
தோழர் பிரகாஷ் காரத்திற்கும் அமர்த்யா சென்னுக்கும் இடையிலான விவாதத்தின்மிக முக்கியமான பகுதியைக் காண்போம்: அமர்த்யா சென் இடதுசாரிகளுக்குப் பரிந்துரைக்கிறார்:
‘நீங்கள் காங்கிரசைஆதரியுங்கள். அல்லது காங்கிரசின் இடதுசாரிப் பிரி
வாகச் செயல்படுங்கள்.’தோழர் பிரகாஷ் காரத்இந்தப் பரிந்துரைக்கு என்னபதில் தந்துள்ளார்? சுதந்திரம்அடைந்து 60 ஆண்டுகள்ஆன பின்னரும், இந்தப்பாதை, எந்த விதத்திலும்மேற்கொள்ள முடியாதஒன்று என்பதையே, இடதுசாரிகளுக்கு அனுபவம்
கற்றுத் தந்துள்ளது.
அனுபவம் கற்றுத் தந்தது எப்போது? 2008இலா?2004இலா? 1998 இலா? 1996இலா? காங்கிரசை ஆதரியுங்கள், அல்லது அதன் இடதுசாரிப் பிரிவாகச் செயல்படுங்கள் என்ற ஆலோசனைஎந்த அரசியல் மதிப்பீட்டின்அடிப்படையில் வழங்கப்படுகிறது? இந்த மதிப்பீட்டிற்குவர நாடாளுமன்ற இடதுசாரிகளின் செயல் தந்திர வழிஎப்படி வாய்ப்பு தருகிறதுஎன்பதை அடுத்து சற்று விரி
வாகவே காண்போம்.

(அடுத்த இதழில் தொடரும்)

0 Responses to ‘தோழமை விவாதம்’

About Me

1/10, 11வது தெரு,
கருணாநிதி நகர், அயனாவரம்,
சென்னை - 600 023
தொலைபேசி: 95-44-26743384
மின்னஞ்சல்
maleytheepori@yahoo.com

Followers

;
withdraw the false cases on comrade s.kumarasami and other pricol workers ONLINE PETITIONS [2] CLIK HERE
withdraw the false cases on comrade s.kumarasami and other pricol workers ONLINE PETITIONS [2] CLIK HERE