5 சட்டமன்ற தொகுதிஇடைத் தேர்தல்களில்,திமுக கூட்டணி அமோக
வெற்றி பெற்றுவிட்டது.இப்போதும் திமுக அரசு,மைனாரிட்டி அரசுதான்.தங்கச் சங்கிலிகள், மோதிரங்கள் என கழகக் கண்மணிகளுக்கு வெகுமதிகள்காத்திருக்கின்றன. முன்கூட்டியே தோல்வியைமுடிவு செய்துவிட்டதால்கொடநாடு போய்விட்டார்ஜெயலலிதா. எம்ஜிஆர்கட்டி வளர்த்த இயக்கம்கலைந்து காணாமல் போய்விடுமா என்று பத்திரிகைகள்செய்திக் கட்டுரைகள் வெளியிட்டன. அஇஅதிமுகவின்தேர்தல் புறக்கணிப்புக்குஅப்பால் 68 சதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது.

திமுக தலைவர்கள்எல்லாம் இடைத்தேர்தல்நடந்த தொகுதிகளில் முகாமிட்டு வாக்குப் பதிவைகவனித்துக் கொண்டிருந்தபோது, அஇஅதிமுகவின்வளர்மதியும் சேகர் பாபுவும்
சென்னையில் அஇஅதிமுகவின் மகளிர் அணி ஆர்ப்பாட்டத்தில் இருந்தார்கள்.திமுகஅரசை மைனாரிட்டிஅரசு என்று அழைப்பதை
ஜெயலலிதா நிறுத்தும் வரை,ஜெயலலிதாவை திருமதிஜெயலலிதாஎன்றுதான்அழைப்பேன் என்று கருணாநிதி சொன்னதைக் கண்டித்து, ஜெயலலிதாவை சிறுமைப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு பெண்ணினத்தையே கருணாநிதி சிறுமைப்படுத்திவிட்டார் என்றுகுரலெழுப்பிய அந்த ஆர்ப்பாட்டம் ஜெயலலிதாவின்தேர்தல் புறக்கணிப்பு உருவாக்கிய கேள்விகளை மட்டுப்படுத்திவிட முடியாது.கிட்டத்தட்ட அரசியல்துறவறம் பெற்றுக் கொண்டு
கொடநாட்டு பங்களாவில்தஞ்சம் புகுந்துவிட்ட ஜெயலலிதாவை அங்கிருந்தேபேசச் செய்தது கருணாநிதிதான். மைனாரிட்டி அரசைமைனாரிட்டி அரசு என்றுதான் அழைக்க முடியும்.

இது அரசியல் தளத்தில்எதிர்க்கட்சியின் விமர்சனம்என்றால், அதை அரசியல்ரீதியாகத்தான் எதிர்கொள்ள வேண்டும். இது‘சிலை மாற்று’ அரசியல்நடத்தும் கருணாநிதிக்குநிச்சயம் தெரியும். ஆனால்,எதிர்ப்பவர் பெண் என்பதால், காலாகாலமாய்,
பெண்ணை அடக்க ஆணாதிக்க சமூகம் பயன்படுத்தும்ஆயுதத்தை கையில் எடுக்கிறார்.

ஜெயலலிதா எம்ஜிஆருக்கு எழுதிய கடிதம்,சோபன் பாபுவுடன் எடுத்தபுகைப்படம் எல்லாம்முரசொலியில் வெளியாகின்றன. பண்பாடு பற்றி மாய்ந்து மாய்ந்து பேசும் கருணாநிதிஎப்படி, இந்த வயது வந்தும்,கொஞ்சம் கூட, பொது
வெளியில் கூச்ச நாச்சம்,நாகரிகம் இல்லாமல் நடந்துகொள்கிறார்? மத்தியபிரதேச அரசு, திருமணதிட்டத்தில் பயன்பெற வந்தபெண்கள் மீது நடத்தியபரிசோதனைக்கும் இதற்கும்என்ன வித்தியாசம்?

ஆதிக்கத்திற்கான பலவழிகளில் மொழியும் ஒன்று.பயன்பாட்டில் உள்ள, நன்கறியப்பட்ட மொழிகள்கொஞ்சம் கொஞ்சமாகஆணாதிக்கத்தில் இருந்துவிடுபட்டு வருகின்றன. விடுபட்டே ஆகவேண்டும் என்பதை வளர்ந்து வரும் ஜனநாயகப் போராட்டங்கள் உறுதிப்படுத்துகின்றன. ஆனால்,அவை இன்னும் வெகுதூரம்செல்ல வேண்டியுள்ளது.

திருமணமான, திருமணமாகாத ஆண் ‘திரு’ என்றேஅழைக்கப்படுகிறார். திருமணமான பெண் ‘திருமதி’என்றும், திருமணமாகாதபெண் ‘செல்வி’ என்றும்அழைக்கப்படுகின்றனர்.
தாலி வேலிதான். வேலியைத் தாண்டினால்தான்வெளி, விடுதலை எனஎதையுமே பார்க்க முடியும்.
தாலியைப் போல், ‘திருமதி’என்பதும் திருமணமானபெண்ணின் அடையாளமாகி விடுகிறது. ஆங்கிலத்தில் ‘மிஸ்’ (ஙண்ள்ள்), ‘மிஸஸ்’(ஙழ்ள்) என்ற வேறுபாடுஇப்போது மறைந்துவிட்டது.
பெண்ணை திருமணமானாலும், இல்லாவிட்டாலும் எம்எஸ்’ (ஙள்) என்றேவிளிக்கிறார்கள். தமிழில்இப்படி வர இன்னும்காலமாகலாம். அதுவரை,
கருணாநிதிகளின் சிற்றின்பப் பகடிகளுக்கும் இடமிருக்கலாம்.
திருமணம் என்ற சொல்லே, அதை செய்து கொள்ளும் ஆணிடமும், பெண்ணிடமும் உடனடியாக ஒருவெட்க உணர்வை கொண்டு வருகிறது. மகிழ்ச்சிஏற்படலாம். ஏனென்றால்,வாழ்க்கையில் இன்ப, துன்பம் அனைத்தையும் பகிர்ந்துகொள்ள, இறுதி வரை வரும்என நம்பப்படுகிற ஓர் உறவுவருகிறது. ஆனால், வெட்கம் ஏன் வர வேண்டும்?

ஏனென்றால், அந்த இருவரும் பாலியல் உறவு கொள்வார்கள். மொத்த சமூகத்தாலும் அங்கீகரிக்கப்பட்டஏற்பாடு அது. இந்தஏற்பாட்டுக்கு அப்பாற்பட்டஎந்த பாலியல் உறவும்
இன்றைய சமூகத்தில் தவறுஎனக் கருதப்படுகிறது.பிறழ்வு என அறியப்பட்டபாலியல்உறவுகளுக்குக் கூடஇன்று சட்டபூர்வ அங்கீகாரம் கிடைத்துவிட்டது.

ஜெர்மேன் க்ரீயர் என்றபெண்ணியவாதி, ‘அ ஜ்ர்ம்ஹய்ய்ங்ங்க்ள் ஹ ம்ஹய் ஹள்ம்ன்ஸ்ரீட் ஹள் ஹ ச்ண்ள்ட்ய்ங்ங்க்ள் ஹ க்ஷண்ஸ்ரீஹ்ஸ்ரீப்ங்’ என்றார். ஒருமீனுக்கு ஒரு சைக்கிள் எந்தஅளவு அவசியமோ அந்தஅளவுதான் ஒரு பெண்ணுக்கு ஓர் ஆண் அவசியம்என்பது அவர் வாதம்.இன்று இது நடைமுறையாகி வருகிறது. குழந்தை திருமணம், 18 வயதில் திருமணம்,21 வயதில், 30 வயதில், 40வயதில் என எல்லாம்கடந்து திருமணம் தேவையில்லை என்ற போக்குபெண்களுக்கு உகந்ததாகவே இருக்கிறது.

சமூக உழைப்பில், எல்லா மட்டங்களிலும், சமூகவெளியில் எல்லா இடங்களிலும் முக்கியமான, மய்யமான இடத்தை பெண்கள்வகிக்கத் துவங்கிய பிறகு,காலாகாலமாக திருமணம்,குடும்பம் ஆகியவற்றை சுற்றிக் கட்டுப்பட்டுள்ளஆணாதிக்க சுவர்கள்தாக்கப்படுகின்றன. அந்தத்தாக்குதல்களில் ஒன்றுதான்திருமணம்தேவையில்லை
என்று சில பல பெண்கள்எடுக்கும் முடிவும். ஆனால்,திருமணம் தேவையில்லைஎன்று முடிவெடுக்கும்பெண்கள், பாலியல் உறவும்தேவையில்லை என்று முடிவெடுக்க வேண்டிய அவசியமில்லையே. அவர்கள் இதையும் சேர்த்துத்தான் முடிவெடுக்கவேண்டும் என்றுஎப்படி எதிர்பார்க்க முடியும்? ஏன் அப்படி எதிர்பார்க்க வேண்டும்? அப்படிஇருந்தால் அது மாபெரும்குற்றமா? அரசியல் வாழ்க்கைக்கு அடிப்படை தகுதியா? அது அவரவர் தனிப்பட்ட விசயம் அல்லவா?அதில் மூக்கை நுழைப்பது அநாகரிகம் அல்லவா?அப்படி இருந்து விட்டால்,அதை இழிவுபடுத்தப்பார்க்கிறது ஆணாதிக்கஅணுகுமுறை. திருமணம்தேவையில்லை என்று முடிவெடுக்கும் ஆண்களும்உண்டு. ஆனால், அவர்களிடம் இப்படி ஒரு பிரிக்க
முடியாத முடிவை எவரும்எதிர்பார்ப்பதில்லை. இருந்துவிட்டால் அதை இழிவுபடுத்துவதும் இல்லை.மு த ல ô ளி த் து வசமூகத்தில் குடும்பம் எப்படி
ஓர் ஏற்பாடோ, அதேபோலத்தான் திருமணமும்.

இந்த ஏற்பாடுகள் சிலஉரிமைகள், கடமைகள்ஆகியவை தொடர்பானவை. இந்த உரிமைகள், கடமைகள் குடும்பத்துக்கானவை, திருமணம் சார்ந்தவை என்று நிறுத்தும் வரைமுதலாளித்துவ சமூகம்எண்ணெய் போட்ட சக்கரம் போல் சுமுகமாய் சுற்றிக் கொண்டிருக்கும்.வெளியே வேலைக்குசெல்லாமல் வீட்டில்வேலை செய்யும் பெண்ணுக்கு ஊதியம் எப்படி கணக்கிடுவது என்று இப்போதுவிவாதம் துவங்கிவிட்டது.பெண்கள் வீட்டில் செய்யும்வேலை உழைப்புச் சக்தியை மறுஉற்பத்தி செய்வது என்ற மார்க்சிய பொருளில் இல்லாவிட்டாலும், விவாதம் வந்து
விட்டது. இந்த நேரத்தில்,காலத்துக்கு சற்றும் ஒவ்வாதஒரு கருத்தை வெளியிடுகிறார் கருணாநிதி.
இந்த விசயத்தில் மனோகராவில் இருந்து அவர் அறிவு வளரவேஇல்லைஎன்பதைத்தான்இது காட்டுகிறது.ஆனால், சமூகம்வளர்கிறது. ஜனநாயகப்போராட்டங்கள் வளர்கின்றன. அவற்றில் பெண்களின்பங்கு வளர்கிறது. அது
கருணாநிதிக்கு சொல்லும்:கசடு கசடுதான். மைனாரிட்டி அரசு, மைனாரிட்டிஅரசுதான்.’
மண்ணில் பாதி
􀂉

0 Responses to கசடு, கசடுதான்! மைனாரிட்டி அரசு, மைனாரிட்டி அரசுதான்!

About Me

1/10, 11வது தெரு,
கருணாநிதி நகர், அயனாவரம்,
சென்னை - 600 023
தொலைபேசி: 95-44-26743384
மின்னஞ்சல்
maleytheepori@yahoo.com

Followers

;
withdraw the false cases on comrade s.kumarasami and other pricol workers ONLINE PETITIONS [2] CLIK HERE
withdraw the false cases on comrade s.kumarasami and other pricol workers ONLINE PETITIONS [2] CLIK HERE