பறவைக் காய்ச்சலைத்தொடர்ந்து, ஹைச் 1 என்1 வைரஸ் கிருமியால்
ஏற்படும் பன்றிக்காய்ச்சல்என்ற புதிய வகை தொற்றுநோயால் உலகம் முழுவதும்
உள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து,
ஸ்பெயின், ஜப்பான், சிலிஉள்ளிட்ட 74 நாடுகளில்இந்த நோய் பரவியிருக்கிறது.இந்தியாவில் மட்டும்2200 பேர் இந்தப் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அதிகாரபூர்வதகவல்கள் தெரிவிக்கின்றன.
30க்கும் மேற்பட்டோர்இதுவரை இறந்து போய் உள்ளார்கள்.

உலகம் முழுவதும் இதுஒரு ஆட்கொல்லி நோய் எனஅதிகாரபூர்வமாக அறி
விக்கப்பட்டுள்ளது. பன்றிக்காய்ச்சல் பற்றி இடைவிடாமல் 24 மணி நேரமும் எல்லா
ஊடகங்களும் செய்திவெளியிட்டு பெரும் பீதியைக் கிளப்பி விட்டுள்ளன.இதற்குப் பின்னால் மிகமுக்கியமான விசயங்கள்மறைக்கப்பட்டுள்ளன. முதலாவதாக இந்நோய்க்குஉண்மையான காரணம்என்ன? எதனால் இது ஏற்படுகிறது? எவ்வாறு பரவுகிறது? இதுமாதிரியான நோய்த்தாக்குதல்களை எதிர்காலத்தில் எப்படி எதிர் கொள்வது? இந்தக் கேள்விகளெல்லாம் எந்த ஒரு நோய்க்கும் நிரந்தரத் தீர்வுக்கானமய்யமான கேள்விகள்.

இருப்பினும், துரதிஷ்டவசமாக, ஊடகங்களின் கவனம் முழுவதும் ஆழமான
இக்கேள்விகள் மீது அல்லாமல் ஆட்கொல்லி நோய் பற்றிய பீதியின் மீதே குவிக்கப்
பட்டுள்ளது.மேற்கத்திய நாடுகளில்பரவலாக உள்ள நவீன கால்
நடை வளர்ப்பு பண்ணைநடை முறைகள்தான் பன்றிக் காய்ச்சல் மற்றும் நோய்கள் குறிப்பாக பித்துப்பிடித்த பசு வியாதி (ஙஹக்இர்ஜ்க்ண்ள்ங்ஹள்ங்) ஆகியவற்றிற்கு
ஊற்றுக்கண்என்பதைமுக்கியஊடகங்கள்எதுவும்சுட்டிக்காட்டத்தயாராகஇல்லை.மனிதர்கள் நுகர்வுக்காக, மாடு, ஆடு, பன்றி,கோழி போன்ற விலங்குகளை வளர்க்கும் நிறுவனங்களில் உள்ள மோசமானசூழல் பற்றி விலங்கு உரிமை ஆர்வலர்களும், சுற்றுப்புற சூழல் ஆர்வலர்களும்பல பத்தாண்டுகளாக தொடர்ந்து பேசி வருகிறார்கள்.

இறைச்சித் தொழிலின் இன்றைய உலகமயமாக்கப்பட்ட தன்மைதான் பன்றிக்
காய்ச்சல் போன்ற நோய்கள்உருவாகக் காரணமாகும்என அவர்கள் குறிப்பிடுகின்றனர். கிழக்கு மெக்சிகோவில் உள்ள லா குளோரியா நகரம்தான் தற்போதைய பன்றிக் காய்ச்சலின்மய்யம். அங்குதான் உலகின்மிகப் பெரிய பன்றி இறைச்சி பதப்படுத்தும், அமெரிக்க பன்னாட்டு நிறுவனமான ஸ்மித்ஃபீல்ட் ஃபுட்ஸ்நிறுவனத்தின் இறைச்சித்
தொழிற்சாலையின் பிரம்மாண்டமான பன்றிப்பண்ணை வளாகம் உள்ளது.

ஸ்மித்ஃபீல்ட் நிறுவனம் உட்பட உலக உணவுதொழிலைக் கட்டுப்படுத்தும் பகாசுர பன்னாட்டுநிறுவனங்கள் கடந்து வந்தபாதை அச்சமூட்டுவதாகஉள்ளது. உதாரணமாக,
இந்தத் தொழிலில் உள்ளமற்ற ஆலைகளைப் போலவே ஸ்மித்ஃபீல்ட் நிறுவனத்தின் லா குளோரியாஆலையும் கழிவுப் பொருள்கள் மற்றும் கழிவு நீர்ஏரிகளையே பெரிய அளவில் உருவாக்கி இருக்கிறது.இந்த வருடம் மார்ச் மாதத்தில் அந்த நகர மக்கள்
தொகையில் 60 சதம் பேர்ஃப்ளு போன்ற அறிகுறிகளால் பாதிக்கப்பட்டனர்.நெரிசல் காரணமாகவும்வேகமாக உணவு தரப்படுவதாலும் அறைகளுக்குள்ளே அடைபட்டு கிடப்பதாலும் நோய் எதிர்ப்புச் சக்திகுறைந்து போன பன்றிகள்,வைரஸ் பாதித்த உமிழ்நீர்
மூலம் வேகமாகப் பரவும்ஃப்ளு பரவ மிகவும் ஏற்றவளர்ப்பிடமாக மாறிவிட்டன.

ஓர் இடத்தில் இருந்துமற்றோர் இடத்திற்கு உயிருள்ள விலங்குகளை கொண்டு செல்லும் தற்பதைய நவீன நடைமுறையின் விளைவாக, பன்றி மந்தைகள் மூலம் புதிய வைரஸ் கிருமிகள் மிக வேகமாகநாடு முழுவதும் பரவின.சுற்றுச் சூழலை மாசுபடுத்துவது, தொழிலாளர் உரிமைகளை பறிப்பது ஆகியவற்றைப் பொறுத்த வரை,
ஸ்மித்ஃபீல்ட் நிறுவனத்தின்கடந்த காலம் மிகவும்மோசமானது.
இப்போது,கொள்ளை லாபம் ஈட்டகால்நடை பண்ணைகளைஅதிகளவில் எந்திரமயப்படுத்தியுள்ளதால் அது சுற்றுப்புறச் சூழலுக்கும் சுகாதாரத்திற்கும் மிகப்பெரும்
கேடு ஏற்படுத்தியுள்ளது.

நவீன கால்நடைப்பண்ணை நடைமுறையின்விளைவாக பன்றிக்காய்ச்சல் பரவுவதைத் தடுக்கஉண்மையிலேயே மிகுந்தஅக்கறை செலுத்தப்படவேண்டிய அதே வேளையில், சாதாரண ஃப்ளு காய்ச்சல் காரணமாக ஒரு நாளைக்கு சுமார் 570 மரணங்கள்
நிகழ்வதும் வாந்தி, பேதி,காசநோய், மலேரியா,டெங்கு மற்றும் இதர
நோய்களால் நாள் ஒன்றுக்கு2250 பேர் மரணமடைகிறார்கள் என்பதும் அதே
அளவு அக்கறையுடன் கவனிக்கப்பட வேண்டிய விசயம். ஆனால், ஊடகங்களும்
சரி அரசாங்கங்களும் சரிஇவற்றைக் கண்டுகொள்வதேயில்லை. உலகம் முழுவதும் பன்றிக் காய்ச்சலால்இறந்தவர்களின் மொத்தஎண்ணிக்கை இந்தியாவில்ஒரு நாளைக்கு காசநோய்,வாந்தி, பேதி தொடர்பானநோய்களால் இறப்பவர்களின் எண்ணிக்கையை விட
குறைவுதான். உலகம் முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ளபன்றிக் காய்ச்சல் மரணங்களை, இதர காரணங்களால்ஏற்பட்டுள்ள மரணங்களின்ஆண்டு எண்ணிக்கையுடன்
ஒப்பிட்டுப் பார்ப்பது பிரச்சனையைப் புரிந்து கொள்ளஉதவும்.

வருடத்திற்கு ஒருமில்லியன் பேர் மலேரியாவாலும் 2 மில்லியன் பேர்
எய்ட்ஸôலும் 2 மில்லியன்பேர் காற்று மாசுபடுவதாலும் 7.4 மில்லியன் பேர்
புற்றுநோயாலும் 17.5 மில்லியன் பேர் இருதய நோயாலும் 1.6 மில்லியன் பேர் காச
நோயாலும் இறந்துபோகிறார்கள் என உலக சுகாதாரஅமைப்பு (ரஏஞ) தெரிவித்துள்ளது. வேறு வார்த்தையில் சொல்வதென்றால்,வருடத்திற்கு 31.5 மில்லியன் மக்கள், தடுத்து நிறுத்தக்கூடிய நோய்களால் மரணமடைகிறார்கள்.பெரிய அளவில் மரணங்களைஏற்படுத்துகிற மலேரியா போன்ற நோய்களைப்பற்றி ஒட்டுமொத்த நிர்வாக எந்திரமும் ஏன் உடனடியாக ஒன்றிணைந்து விவாதிக்கவில்லை? இந்த நோய்களால் பாதிக்கப்படுபவர்கள் பெரும்பான்மையோர்கிராமப்புற ஏழைகள் என்பதனாலா? உண்மையைச்சொல்வதென்றால், அநேகநாடுகள் பன்றிக்காய்ச்சல்
பற்றிய செயற்கையான பயபீதியைப் பரப்பிவிட்டு தங்களுடைய உடனடி அவசரசுகாதாரத் தேவைக்கானநிதியாதாரங்களை வேறுபக்கம் திருப்பி விட்டுக்
கொண்டிருக்கின்றன.

சுகாதாரமற்ற, ஏழை,வளர்ச்சியடையாத நாடுகளில் இருந்துதான் தொற்றுநோய்கள் உற்பத்தியாகிஅவை வளர்ந்த நாடுகளுக்கு பரவுகிறது என்பது
போன்ற ஒரு கருத்தைவளர்ந்த மேலை நாடுகள்பரப்பிட முயற்சிக்கின்றன.ஆனால்,பன்றிக் காய்ச்சல்,மேற்கு நாடுகளின் பேராபத்தான தொழிற்சாலைப் பண்ணைகளில் இருந்து வெளிவந்து இந்தக் கருத்தை
உடைத்தெறிந்துவிட்டது.

இந்தியாவிலும் சரி,உலகம் முழுவதிலும் சரி,பன்றிக் காய்ச்சல் பிரச்சினை
யை, மிகவும் கவலை அளிக்கும் விதத்தில் உள்ள மோசமான பொதுச் சுகாதாரம்தான் இந்திய மக்களைதாங்க முடியாத நாள்பட்டவியாதிகளிலும் தொற்றுவியாதிகளிலும் சிக்கித்தவிக்கவிட்டுள்ளது என்றபிரச்சினையில் இருந்து,தனித்துப் பிரித்துப் பார்க்க
முடியாது.

ஸ்மித்ஃபீல்ட் நிறுவனத்தில் இறந்துபோன பன்றிகள்
குவித்து வைக்கப்பட்டுள்ள காட்சிலிபரேசன் செப்டம்பர்
2009 இதழில் இருந்து

தமிழில்: ரமேஷ்

0 Responses to பன்றிக் காய்ச்சல்: சில உண்மைகள்

About Me

1/10, 11வது தெரு,
கருணாநிதி நகர், அயனாவரம்,
சென்னை - 600 023
தொலைபேசி: 95-44-26743384
மின்னஞ்சல்
maleytheepori@yahoo.com

Followers

;
withdraw the false cases on comrade s.kumarasami and other pricol workers ONLINE PETITIONS [2] CLIK HERE
withdraw the false cases on comrade s.kumarasami and other pricol workers ONLINE PETITIONS [2] CLIK HERE