பீகார் மாநில ஊழியர் கருத்தரங்கம் பாட்னாவில் ஜøலை 28 அன்று நடைபெற்றது.
அந்த கருத்தரங்கத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் திபங்கர் பேசும் போது
‘மத்திய கமிட்டி அழைப்பை அமல்படுத்துவதில் உள்ள முக்கிய அம்சம்
மற்றவர்களிடத்தில் உள்ள குறைகளையே பார்த்துக் கொண்டிருக்காமல் நம்மை நாமே
சுயபரிசோதனைக்கு உட்படுத்துவதேயாகும். இந்த அழைப்பை அதனுடைய
உண்மையான அர்த்தத்தில், அனைத்துக் கட்சி கமிட்டிகளுக்கும் ஒவ்வொரு கட்சி உறுப்பி
னரிடமும் எடுத்துச் செல்ல வேண்டும்’ என வலியுறுத்தினார்.
ஜøலை 28 அழைப்பின் எழுச்சிமிகு உணர்வைப் பற்றிக் கொண்டு பீகார் மாநிலக்
கமிட்டி 10 அம்ச வழிகாட்டுதல் உருவாக்கியுள்ளது.

அவை,

மக்களை மதிக்கும் புரட்சிகர கம்யூனிஸ்ட்டின் பண்பை உயர்த்திப் பிடிப்பது, இந்த
அடிப்படை விதியை மீறும் எந்தவொரு நிகழ்வையும் உறுதியுடன் எதிர்த்துப்
போராடுவது.
தலைவர்களையும் மேல் இருந்து வரும் அழைப்புகளையுமே சார்ந்திருப்பதற்கு மாறாக
கீழ் மட்ட கமிட்டிகள் சுயசார்பு, சுதந்திர முன்முயற்சி ஆகியவற்றை ஊக்குவிப்பது.
கமிட்டிக் கூட்டங்களை தொடர்ச்சியாக, முறையாக நடத்துவது, மேல் கமிட்டிகளுக்கு
அறிக்கை அனுப்பும் வழக்கத்தை உறுதிப்படுத்துவது, வருகையின்மைக்கு முடிவு
கட்டுவது.
மாவட்டச் செயலாளர்களும் அனைத்து முன்னணித் தோழர்களும் ஒவ்வொரு
மாதமும் குறைந்தது 5 கிராமக் கூட்டங்களை நடத்துவது.
கட்சிக் கமிட்டிகளுக்கு வெளியே விமர்சனம் செய்யும் கலாசாரத்திற்கு முற்றுப் புள்ளி
வைப்பது. சரி, தவறு மற்றும் நண்பர்கள், எதிரிகள் ஆகியவற்றுக்கிடையே உறுதியான
பிரித்துநிறுத்தும் கோடு வரைந்து கொள்வது.
கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள நிலம், குளம் போன்ற பொதுச் சொத்துக்களின்
மீது ஜனநாயகபூர்வ, வெளிப்படையான கட்டுபாட்டினை உத்தரவாதப்படுத்துவது.
மக்களைச் சார்ந்து நிற்கும் கோட்பாட்டை உயர்த்திப் பிடிப்பது. பஞ்சாயத்து
அலுவலர்கள், பெருவியாபாரிகள், ஒப்பந்தக்காரர்கள் போன்றவர்களது வீடுகளை
கட்சியினர் தங்குவதற்கோ கூட்டங்கள் நடத்துவதற்கோ பயன்படுத்தக்கூடாது.
ஒப்பந்தக்காரர், பெருவியாபாரி, விற்பனை அல்லது காப்பீட்டுப் பிரதிநிதி, தன்னார்வத்
தொண்டு நிறுவன செயல்வீரர் போன்றோர் கட்சி கமிட்டியின் உறுப்பினராகவோ,
கட்சிக் கிளையின் செயலாளராகவோ இருக்கக் கூடாது.
பஞ்சாயத்துக்களை போராட்டங்களின் மய்யங்களாக்க வேண்டும். நமது பஞ்சாயத்து
உறுப்பினர்கள் வெகுமதி வழங்குபவர்களாக இல்லாமல் மக்கள் போராட்டத்
தலைவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் மீதான மக்களுடைய கண்காணிப்பை
ஏற்றுக்கொள்ள வேண்டும்.
சட்டமன்ற உறுப்பினர்கள், பஞ்சாயத்துத் தலைவர்களும் ஒவ்வொரு காலாண்டிற்கும்
வேலை அறிக்கைகளை மக்கள் சபை முன் சமர்ப்பிக்க வேண்டும். பஞ்சாயத்துத்
திட்டங்களின் பயனாளிகளைக் கண்டிப்பாக, கிராமசபைக் கூட்டங்கள் மூலம்
மட்டுமே தேர்வு செய்ய வேண்டும்.
லிபரேசன் செப்டம்பர் 2009 இதழில் இருந்து. தமிழில்: ரமேஷ்

0 Responses to பீகார் தியாகிகள் தினக் கருத்தரங்கம்

About Me

1/10, 11வது தெரு,
கருணாநிதி நகர், அயனாவரம்,
சென்னை - 600 023
தொலைபேசி: 95-44-26743384
மின்னஞ்சல்
maleytheepori@yahoo.com

Followers

;
withdraw the false cases on comrade s.kumarasami and other pricol workers ONLINE PETITIONS [2] CLIK HERE
withdraw the false cases on comrade s.kumarasami and other pricol workers ONLINE PETITIONS [2] CLIK HERE