தேசிய ஊரக வேலை
உறுதித் திட்டத்தை அமல்படுத்
துவதில் உள்ள முறைகேடுகளால்
மதுரையிலும் அதன் சுற்றுப்
பகுதிகளிலும் உள்ள கிராமப்
புறத் தொழிலாளர்கள் அவர்க
ளாகவே வீதிக்கு வந்து போரா
டும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்
ளனர். மதுரையில் வேலை உறு
திச் சட்டத்தின் கீழான தொழிலா
ளர்களின் போராட்டங்கள் அன்
றாட நிகழ்வாகிவிட்டன.
மதுரையில் நமது கட்சி
வேலை முக்கியமாக வாடிப்ப
ட்டி பகுதியில் இப்பொழுது உள்
ளது. வாடிப்பட்டி 6க்கு மேற்
பட்ட கிராமங்களைக் உள்ளடக்
கிய நகரப் பஞ்சாயத்து ஆகும்.
அஇவிதொச, அஇமுபெக சார்
பாக 10 கிராமங்களில், மோசமான
ஊரக வேலை உறுதித் திட்ட
அமலாக்கத்திற்கெதிராக கையெ
ழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.
கிராமப் பஞ்சாயத்துகளை நகரப்
பஞ்சாயத்தில் இருந்து தனியாகப்
பிரித்து விட்டு நகரப் பஞ்சாயத்
துகளையும் தேசிய ஊரக
வேலை உறுதிச் சட்டம் மற்றும்
நலத் திட்டத்தின் கீழ்க் கொண்டு
வரக் கோரி வாடிப்பட்டியில்
கையெழுத்து இயக்கம் நடந்தது.
ஊரக வேலை உறுதித் திட்
டத்தின் கீழ் வேலை நடைபெ
றும் இடங்களுக்கும் கிராமங்க
ளுக்கும் சென்று மக்களைச்
சந்தித்து 5000த்திற்கும் மேற்
பட்ட கையெழுத்துக்கள் பெறப்
பட்டன. பல பஞ்சாயத்துக்கள்
போராட்டத்திற்கு தொழிலாளர்
கள் செல்வதைத் தடுக்க கோரிக்
கைகளை நிறைவேற்ற உறுதிய
ளித்தனர். ஒரு பஞ்சாயத்தில்
கூலியை ரூ.40ல் இருந்து ரூ.75
ஆக உயர்த்தினர். பல பஞ்சாயத்
துக்களில் ஆகஸ்டு 12 போராட்ட
நிகழ்ச்சியில் தொழிலாளர்கள்
கலந்து கொள்வதைத் தடுக்க
அன்று கட்டாய வேலை என
அறிவித்து வராதவர்கள் வேலை
யிழக்க நேரிடும் என எச்சரித்த
னர்.
ஆகஸ்டு 12 அன்று மக்கள்
பிடிஓ அலுவலகம் முன்பு திரண்
டனர். தோழர் மதிவாணன் திர
ண்டிருந்த மக்கள் மத்தியில் அர
சியல்வாதிகள் மற்றும் அதிகாரி
களின் கூட்டுக் கொள்ளையை
அம்பலப்படுத்திப் பேசினார்.
கிராம சபைகளைச் செயல்படா
மல் செய்வதன் மூலம் பெரும்
பணம் அமைதியாகக் கொள்ளை
யடிக்கப்படுகிறது என்றும் தொழி
லாளர்கள் இந்த ஊழல் நடவடிக்
கைகளுக்கு எதிராகப் போராட
வேண்டும் எனவும், அதற்காக
அஇவிதொசவை பலப்படுத்த
வேண்டும் என்றும் கேட்டுக்
கொண்டார். பேரணியை தோழர்
மதிவாணன் கொடியசைத்துத்
துவக்கி வைத்தார்.
200க்கும் மேற்பட்டோர்,
முக்கியமாகப் பெண்கள், கலந்து
கொண்ட பேரணி, வருவாய்
ஆய்வாளர் அலுவலகம் வரை
சென்றது. பல கிராமப்புறப்
பெண்கள் தேசிய ஊரக வேலை
உறுதித் திட்டத்தில் நடக்கும்
ஊழலைப் பற்றிப் பேசினார்கள்.
கட்சியின் மாவட்டத் தலைமைக்
குழு உறுப்பினர்கள் தோழர்கள்
குண்டுமலை, முருகேசன், சண்மு
கம், அஇமுபெக மாவட்டச்
செயலாளர் தோழர் திவ்யா
ஆகியோர் உரையாற்றினார்கள்.
இறுதியாக கட்சியின் மாநிலக் குழு
உறுப்பினர் தோழர் உஷா பேசும்
போது கோரிக்கைகளை வலி
யுறுத்தி மாவட்ட ஆட்சித் தலை
வர் அலுவலகம் முன்பு மாபெரும்
காலவரையற்றப் பட்டினிப்
போராட்டம் நடத்தப் படும்
என்றும் சேகரிக்கப்பட்ட மக்கள்
கையெழுத்துகளுடன் கோரிக்கை
கள் மாவட்ட ஆட்சித் தலைவரி
டம் ஆகஸ்டு 19 அன்று கொடுக்
கப்படும் என்றும் கூறினார்.
தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தில் உள்ள
முறைகேடுகளுக்கு எதிராக விவசாயத் தொழிலாளர்கள் போராட்டம்
நிதிஷ்குமாரின் வறட்சி நிவாரணமும் அவரின் வெள்ள நிவாரணத்தைப் போலவே கேலிக்
கூத்தானதுதான். முன்னாள் முதல்வர் லல்லுவோ ஆளும்வர்க்க எதிர்கட்சிப் பாத்திரத்தை அபத்தமாக்கி
விட்டார். ‘முதலமைச்சர் நிதிஷ்குமார், இந்து மத நம்பிக்கைகளை மதிக்காமல் சூரியகிரகணத்தின் போது
சாப்பிட்டார். அதனால் அவர் பெற்ற சாபம்தான் இந்த வறட்சி. நிதிஷ் பிஸ்கட்டை, தான் சாப்பிட்டது மட்டுமின்றி
மற்றவர்களுக்கும் கொடுத்தார். அந்தப் பாவத்தால்தான் பீகாரை வருண பகவான் சீரழித்து விட்டார்.
சூரியபகவானும் கூட நிதிμன் அகங்காரத்தால் கோபம் அடைந்து தன்னை மேகத்தின் பின்னே மறைத்து
கொண்டு, தரக்னாவிற்கு, தரிசனத்திற்காகவே சென்ற, முதலமைச்சருக்குத் தரிசனம் தர மறுத்துவிட்டார்’
என்று அபத்தமாகக் பேசி படுபிற்போக்கு மூடத்தனத்தின் மொத்த உருவமாகி விட்டார். பீகார் வறட்சியால்
வறண்டு போய் விட்டிருக்க, ஆளும் வர்க்கமோ மூடத்தனங்களைத்தான் மக்களுக்கு நிவாரணமாகத்
தருவேன் என்கிறது.
மூடத்தனத்தின் மொத்த உருவம்
(லிபரேசன் செப்டம்பர் 2009 இதழில் இருந்து)
18 - 24, ஆகஸ்ட் எம்எல்
அப்டேட்டில் இருந்து
தமிழில்: ரமேஷ்


0 Responses to தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தில் உள்ள முறைகேடுகளுக்கு எதிராக விவசாயத் தொழிலாளர்கள் போராட்டம்

About Me

1/10, 11வது தெரு,
கருணாநிதி நகர், அயனாவரம்,
சென்னை - 600 023
தொலைபேசி: 95-44-26743384
மின்னஞ்சல்
maleytheepori@yahoo.com

Followers

;
withdraw the false cases on comrade s.kumarasami and other pricol workers ONLINE PETITIONS [2] CLIK HERE
withdraw the false cases on comrade s.kumarasami and other pricol workers ONLINE PETITIONS [2] CLIK HERE