‘கையூர் போராளிகள், நமது கட்சியின் பெயரால் தூக்கு மேடையைத் தழுவினார்கள்.’
- சாரு மஜøம்தார்

கையூர், தெலுங்கானா போன்ற புகழ்மிக்க விவசாயப் போராட்டங்களின்
உண்மையான வாரிசான மாலெ கட்சியின் 40ஆவது ஸ்தாபக ஆண்டை ஒட்டி,
தெலுங்கானா விவசாயப் போராட்ட வீர வரலாறு வெளியிடப்படுகிறது.

விடுதலை பெற்றஇந்தியாவின் ராணுவம் அய்தராபாத் மாகாணத்துக்குள் நுழைந்தபோது, அங்குநிசாம் ஆட்சியில் துன்பப்பட்டுக் கொண்டிருந்தபல்வேறு பிரிவு மக்களும்,இந்திய ராணுவம் நிசாம்கொடுமைகளில் இருந்துதங்களை விடுவிக்க வந்துள்ளது என நினைத்து மகிழ்ச்சிஅடைந்தார்கள். கம்யூனிஸ்டுகளின் தலைமையில்,தெலுங்கானாவில், தீவிரமான நிலப் போராட்டங்கள் நடத்திக்கொண்டிருந்தவர்களும், நிசாமை, அதன்ரசாக்கர்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இந்திய ராணுவம் எடுத்த நடவடிக்கைகளில் உத்வேகம்பெற்றனர்.
அந்த உத்வேகத்துடன், நிலப்பிரபுத்துவஎதிர்ப்பு நடவடிக்கைகளைதீவிரப்படுத்தினர். மிகவும்கொடூரமான நிலப்பிரபுக்கள்அழித்தொழிக்கப்பட்டனர்.ரசாக்கர்களின் முகாம்கள்
அழிக்கப்பட்டன. அவர்களிடம் இருந்த ஆயுதங்கள்பறிக்கப்பட்டன. சுதந்திர
இந்தியாவுடன், அய்தராபாத்மாகாணம் இணைவதைதுரிதப்படுத்த, ‘தமது’ சுதந்திர இந்தியாவின், ‘தமது’ராணுவம் எடுத்த நடவடிக்கைகளுக்கு துணை புரிவதாகவே அவர்கள் கருதினர்.நேருவின் அரசாங்கத்தையோ, அதன் உள்ளூர் பிரதிநிதிகளையோ, எதிரிகள்என அவர்களால் அடையாளம் காண முடியவில்லை.

இந்திய ராணுவ ஆட்சிபொறுப்பேற்ற பதினைந்துநாட்களில், தெலுங்கானாப்போராளிகள், இந்திய ராணுவம் மீது தாங்கள் கொண்டிருந்த நம்பிக்கை, எதிர்ப்பார்ப்பு எல்லாம் உடைந்துநொறுங்கிப் போனதைக்கண்டார்கள்.
ù த லு ங் க ô ன ôவிவசாயிகளின் வீரமிக்கப்போராட்டத்தை வழிநடத்திய கம்யூனிஸ்ட் கட்சிதலைமையில், இந்திய ராணுவம் பற்றிய மாயை பெரிதும்இல்லை என்றாலும், விவசாயிகளின் தீவிரமான போராட்டங்கள் கொந்தளித்துக்கொண்டிருந்த அந்த நேரத்தில், மய்யப்படுத்தப்பட்டவழிகாட்டுதலும், முறையான ஒருங்கிணைப்பும்
கிட்டத்தட்ட சாத்தியமற்றுப் போனது. நிசாம்சரணடைந்த பிறகு, இந்தியராணுவத்தின்தாக்குதல்,தெலுங்கானாப் போராளிகள் மீது திரும்பியது. விவ
சாய மக்களை கடுமையானஒடுக்குமுறைக்கு ஆளாக்கிவந்த நிலப்பிரபுக்கள் இந்திய
ராணுவத்தின் நண்பர்கள்ஆனார்கள்.இந்திய ராணுவம் வந்துசேர்வதற்கு முன்னரே,நிலப்பிரபுக்களின் வீடுகள்தரைமட்டமாக்கப்பட்டன.லட்சக்கணக்கான தானிய
மூட்டைகள் மக்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான
கால்நடைகள் பறிமுதல்செய்யப்பட்டன.தெலுங்கானாப் போராளிகளின் போராட்டத்தின்
முன் தாக்குப்பிடிக்க முடியாமல் ஓடிப்போன நிலப்பிரபகள் திரும்பி வந்தனர்.

ராணுவ முகாம்கள் அருகினில் காங்கிரஸ் கட்சியின்அலுவலகங்கள் அமைந்தன.
அந்த அலுவலகங்களில்மூவர்ணக் கொடிபறந்தது.காங்கிரஸ்காரர்கள்,நிலப்பிரபுக்களுடன் சேர்ந்துகொண்டு, நிசாம் ஒழிக்கப்பட்டு விட்டதாகவும், இப்போது மக்கள் ஆட்சி அமைந்துள்ளதாகவும், மக்கள்பறிமுதல் செய்த நிலங்களைதிருப்பித் தந்துவிட வேண்டுமெனவும், காங்கிரஸ் அரசு,அதை மீண்டும் மக்களுக்குபிரித்துத் தரும் எனவும்
பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.மாலெ கட்சி தலைமையில் போராட்டங்களில்உழைக்கும் மக்கள் திரளும்போது, அவர்களை குழப்ப,நக்சலைட்கள் என்று சொல்லி, ஆளும்வர்க்கத்தார்முதல், அதிகாரபூர்வ இடதுகள் வரை இன்று முயற்சிசெய்வது போல், அன்று கம்யூனிஸ்டுகள் நம்பத்தக்கவர்கள் இல்லை என்றும் அவர்கள் ரஷ்ய ஏஜெண்டுகள்என்றும் காங்கிரஸ்காரர்களும், நிலப்பிரபுக்களும்புரளி பரப்பினர்.அய்தராபாத் மாகாணத்தில் அமைந்த இந்தியராணுவ ஆட்சியின் கவர்னர்ஜெனரல் ஜே.என்.சவுத்ரி,கம்யூனிஸ்டுகள் சரணடையாவிட்டால் அவர்களைஅழித்துவிடுவேன் என்றுவெளிப்படையாக அறிவித்தார்.

கட்சி அமைப்பாளர்களும், கெரில்லாப் போராளிகளும், போராட்டப் பகுதிகள் எங்கும், தீவிரப் பிரச்சாரத்தில் இறங்கினர். இந்திய அரசின் உண்மை முகத்தைஅம்பலப்படுத்தினர்.காங்கிரஸ் குழுக்கள் நிலப்பிரபுக்களின் குழுக்களேஎன்றும், போராடிப் பெற்றநிலத்தை, கால்நடைகளை,தானியங்களை, திருப்பித்தரவேண்டியதில்லை என்றும், அவற்றுக்கு கிராம பஞ்சாயத்துக் குழுக்கள் பாதுகாப்பாக இருக்கும் என்றும்,சரணடைய வேண்டாம்என்றும் மக்களுக்கு துணிவு
தந்தனர்.

அந்த சமயத்தில், சூர்யாபேட்டை முழுவதும்,ஓ உழவனேஎன்ன யோசனை?
சமரசம் பற்றியா?பூனை ஒரு பக்கம்எலி ஒரு பக்கம்இடையில் இடமுண்டோ
சமரசம் எதற்கும்?என்று கட்சி உறுப்பினர் ஒருவர் எழுதிய பாடல்ஒலித்துக் கொண்டிருந்தது.ராணுவத்தின் தாக்குதலும், தீவிரம் பெற்றது. கெரில்லாக்களை, மக்களைராணுவம் நேரடியாக தாக்கியது. 6000 பேர் கொண்டராணுவமும், போலீசும் ஒரேநேரத்தில், தேடுதல் வேட்டையில் இறங்கின. இந்தவேட்டைகள் பற்றி தலை
மறைவு கட்சி அமைப்புகளில் இருந்தும், கெரில்லாதலைமைகளில் இருந்தும்,வெளியான சில தகவல்கள்:1948 செப்டம்பர் முதல்டிசம்பர் வரை மட்டும்கொடிய சித்ரவதைக்குஆளானவர்கள் 6500 பேர்.சித்ரவதையால் உயிரிழந்தவர்கள் 60 பேர்.300 பெண்கள் பாலியல்வன்முறைக்காளானார்கள்.கட்சி உறுப்பினர்கள்,கெரில்லாக் குழு உறுப்பினர்கள் என 60 பேர்கொல்லப்பட்டனர்.

சாதாரண விவசாயிகள் 15பேர் கொல்லப்பட்டனர்.40 சதம் கட்சி உறுப்பினர்கள் பிடிபட்டனர்.இந்த சூழலில், மக்களின் மிகவும் அரசியல் படுத்தப்பட்ட பிரிவும், மிகவும்
மோசமாக ஒடுக்கப்பட்ட,சுரண்டப்பட்ட பிரிவும்,விவசாய சமூகத்தின் மிகவும்முன்னேறிய பிரிவும் மட்டுமே, இந்திய அரசாங்கத்தின் தாக்குதலுக்கு எதிரான போராட்டத்தில்கம்யூனிஸ்டுகளுக்கு ஆதரவாக நின்றனர். கம்யூனிஸ்ட்ஆதரவு அடித்தளம் கணிசமாகக் குறைந்தது. ஆயினும்,வல்லமைமிக்க ராணுவத்தையும் தெலுங்கானாப் போராளிகள் எதிர்கொண்டார்கள்.

கட்டமைக்கப்பட்டராணுவத்தின் ஆயுத பலத்தை எதிர்கொள்வதும் இப்போதுசிரமமானது. நல்கொண்டா, கம்மம், வாரங்கல் போன்ற சமவெளிப்பகுதிகளில் இருந்த போராளிகள், வேறுவழியின்றிவ ன ப் ப கு தி க ளு க் கு ம் ,கோயா, சென்சூரி, கோண்ட்போன்ற மலைவாழ் மக்கள்பகுதிகளான கிருஷ்ணாகோதாவரி மாவட்ட காடுகளுக்கும் சென்றனர்.

- தொடரும்

0 Responses to தெலுங்கானா... ‘கையூர் போராளிகள், நமது கட்சியின் பெயரால் தூக்கு மேடையைத் தழுவினார்கள்.’ - சாரு மஜøம்தார்

About Me

1/10, 11வது தெரு,
கருணாநிதி நகர், அயனாவரம்,
சென்னை - 600 023
தொலைபேசி: 95-44-26743384
மின்னஞ்சல்
maleytheepori@yahoo.com

Followers

;
withdraw the false cases on comrade s.kumarasami and other pricol workers ONLINE PETITIONS [2] CLIK HERE
withdraw the false cases on comrade s.kumarasami and other pricol workers ONLINE PETITIONS [2] CLIK HERE