சென்னை மாநகர மாநாடு

Posted by orumaipadu mandram Sep 25, 2009

இகக மாலெ சென்னை மாநகர 10வது மாநாடு, ஆகஸ்ட் 16
அன்று தோழர் மிசா பார்த்தசாரதி அரங்கில் நடைபெற்றது. 53
பிரதிநிதிகளும், 11 பார்வையாளர்களும் கலந்து கொண்டனர்.
மாநிலக்குழு உறுப்பினர், தோழர் எ.எஸ்.குமார் கொடியேற்றி
னார். தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. 7 பேர் கொண்ட
தலைமைக்குழு அமைக்கப்பட்டது. தோழர் சேகர் அறிக்கை
முன்வைத்தார்.
குடியிருப்பு பகுதிகளில் வேலை, அமைப்பு சட்டப்படி கிளை
நடத்துவது, வலைப்பின்னல் உருவாக்குவது, மாணவர், அறிவாளி
பிரிவினர், குடியி ருப்புப் பகுதியில் பெண்கள் மத்தியில் வேலை,
ஒருமைப்பாடு மன்ற வேலை, மாவட்ட கமிட்டி மற்றும் தலைமை
தோழர்கள் பாத்திரம் ஆகிய அம்சங்கள் மீது விவாதங்கள் நடைபெற்றன.
தோழர் குமாரசாமி மாநாட்டு விவாதங்களை தொகுத்து
பேசினார். மாநாட்டு அறிக்கை பிரதிநிதிகள் அவையால் ஏற்றுக்
கொள்ளப்பட்டது. மாநில பார்வையாளர் தோழர் வெங்கடேசன் புதிய
மாவட்ட கமிட்டி தேர்தலை நடத்தி பின் வாழ்த்துரையாற்றினார்.
மாநகர கமிட்டி உறுப்பினர்களாக 5 பெண்கள் உட்பட 23 பேர்
ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாநகர செயலாளராக
எஸ்.சேகர் தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநகர செயலாளர் சேகர்
மாநாட்டு தீர்மானங்களை முன்வைத்தார்.

0 Responses to சென்னை மாநகர மாநாடு

About Me

1/10, 11வது தெரு,
கருணாநிதி நகர், அயனாவரம்,
சென்னை - 600 023
தொலைபேசி: 95-44-26743384
மின்னஞ்சல்
maleytheepori@yahoo.com

Followers

;
withdraw the false cases on comrade s.kumarasami and other pricol workers ONLINE PETITIONS [2] CLIK HERE
withdraw the false cases on comrade s.kumarasami and other pricol workers ONLINE PETITIONS [2] CLIK HERE