ஆகஸ்ட் 6, ஹிரோசிமா நாளில் சென்னையில்‘இடதுசாரி புத்தெழுச்சி சாத்தியமானது. அவசியமானது.தவிர்க்க முடியாதது’ என்றதலைப்பில் கருத்தரங்கம்நடத்தப்பட்டது. 450 பேர்கலந்துகொண்டனர்.

கருத்தரங்கில் தோழர்எஸ்.சேகர் தலைமை தாங்கினார். இகக மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் தோழர்மு.வீரபாண்டியன், இகக மாவடசென்னை மாவட்டசெயலாளர் தோழர் டி.கே.சண்முகம், பங்கேற்று பேசினர்.

மாலெ கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் எஸ்.குமாரசாமிநிறைவுரையாற்றினார்.

இகக, இககமா தோழர்கள்30 பேர் வரை நிகழ்ச்சியில்கலந்து கொண்டனர்.
இகக மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் தோழர்மு.வீரபாண்டியன், இககமாலெ நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதே எப்போதும்தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், இதற்கு முன்புஅவர் கலந்து கொண்டமாலெ கட்சி நிகழ்ச்சி ஒன்றில், மார்க்சிஸ்ட் கட்சியும்கலந்து கொள்ளும் நிகழ்ச்சிஒன்றை மாலெ கட்சி நடத்த வேண்டும் என விருப்பம் தெரிவித்ததாகவும் அந்தவிருப்பம் நிறைவேறியதாகவும் சொன்னார்.

இலங்கைதமிழர் பிரச்சனை பற்றிதோழர் மு.வீரபாண்டியன்விரிவாக உரையாற்றினார்.
இகக(மா) வடசென்னை மாவட்ட செயலாளர்தோழர் டி.கே.சண்முகம்,நாடாளுமன்றத் தேர்தல்முடிவுகளுக்குப் பிறகு, இந்தியாவில் இடதுசாரிகளின்கதை முடிந்துவிட்டது எனபேசி வருபவர்களுக்கு நூற்றுக்கணக்கில் தொழிலாளர்களும் பெண்களும் கலந்து
கொண்டுள்ள இந்த கருத்தரங்கம் சரியான பதிலாகஇருக்கும் என்றார்.

நாடாளுமன்ற தேர்தல்களில்,பீகாரில், மூன்று இடதுசாரிகட்சிகளும் இணைந்து தேர்தலை சந்தித்தது, இடதுசாரிஒற்றுமை பற்றிய செய்தியைநாட்டுக்கு சொல்வதாகஇருந்தது என்றும், தமதுகட்சி அணிகள் மத்தியில்அது பெரும் உற்சாகத்தை
ஏற்படுத்தியது என்றும் கூறினார். கருத்தரங்கின் தலைப்பே புத்தெழுச்சி தருகிறதுஎன்றும், இடதுசாரி கட்சிகள் மத்தியில் எப்போதும்கருத்தியல் தளத்தில் விவாதங்கள் நடந்துகொண்டிருக்கும் என்றும், ஆனால், ஒன்றாக சேர்ந்து செயல்படுவதற்கான களம் இருக்கிறதுஎன்றும் கூறினார்.

மேற்குவங்கத்தில் மார்க்சிஸ்ட்கட்சி ஊழியர்கள் மாவோயிஸ்ட்களால் படுகொலைசெய்யப்படுவதை சுட்டிக்காட்டி மாலெ கட்சி இந்த விசயத்தில், மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைப்பாட்டை ஆதரிக்க வேண்டும் என்றார்.

மாலெ கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் எஸ்.குமாரசாமி,மாவோயிஸ்டுகள் வன்முறையை மாலெ கட்சி ஒருபோதும் அங்கீகரிக்கவில்லைஎன்றும், இந்த விசயத்தில்,மார்க்சிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் தோழர்பிரகாஷ் காரத் கூறியதுபோல, அரசு விதித்துள்ளதடை பயன் தராது என்பதையும், அரசியல் தீர்வே சரிஎன்பதால், காரணங்கள்உள்ளுக்குள் தேடப்படவேண்டும் என்றும் கூறினார்.

மாவோயிசம், நக்சலிசம், இடதுசாரி தீவிரவாதம்தான் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு மிகவும் பேராபத்துஎன மத்திய மாநில ஆட்சியாளர்கள் சொல்லும்போது,மாவோயிஸ்ட் ஆபத்துஎன்று நாமும் பேசுவது ஆபத்தாகவே அமையும் என்றார்.

நாடாளுமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் மீட்சி பெற்றுள்ளதை, மேற்குவங்கத்தில் இடதுசாரி நிகழ்ச்சிநிரலை வலதுசாரி கட்சி கையில் எடுத்துக் கொண்டதை,இடதுசாரிகள் காணத் தவறக் கூடாது என்றும், இடதுசாரிகளுக்கு சந்தர்ப்பங்
களும் சவால்களும் நிறைந்தமக்கள் அரசியலுக்கானபோராட்டக் களங்கள்காத்திருக்கின்றன என்றும்,மக்கள் அரசியல், இடதுசாரிஅரசியல் தவிர்க்க முடியாதது என்றும் கூறியதோடு,இதற்கான களங்களில்சேர்ந்து பயணிப்போம் என
அறைகூவல் விடுத்தார்.
- சேகர்

0 Responses to இடதுசாரி புத்தெழுச்சி சாத்தியமானது. அவசியமானது. தவிர்க்க முடியாதது.

About Me

1/10, 11வது தெரு,
கருணாநிதி நகர், அயனாவரம்,
சென்னை - 600 023
தொலைபேசி: 95-44-26743384
மின்னஞ்சல்
maleytheepori@yahoo.com

Followers

;
withdraw the false cases on comrade s.kumarasami and other pricol workers ONLINE PETITIONS [2] CLIK HERE
withdraw the false cases on comrade s.kumarasami and other pricol workers ONLINE PETITIONS [2] CLIK HERE