தேசிய கிராமப்புறவேலை உறுதி திட்டம், காங்கிரஸ் கூட்டணி அரசாங்கத்தின்,
புகழ்மிக்க திட்டமாக விளம்பரபடுத்தப்பட்டாலும், நாடு முழுதும் இத்திட்டத்தில் பணியாற்றும்விவசாயத் தொழிலாளர்கள்குறிப்பாக பெண்கள் வீதிக்கு
வந்து போராடுவதும், கூலிகுறைத்து மோசடி செய்வதற்குஎதிராக மறியல், கிளர்ச்சிகளில்ஈடுபடுவதும் ஊடகங்களில்தினசரி செய்தியாகின்றன.

ஆனால், இத்திட்டத்தில் ஒதுக்கப்படுகிற நிதியை ஊராட்சிமட்டத்தில் அரசு அலுவலர்கள்,ஊராட்சி தலைவர்கள், அரசியல்கட்சி பிரமுகர்கள் கூட்டுக்
கொள்ளையடிப்பது விரிவாகஅம்பலமாவதில்லை.

விழுப்புரம் மாவட்டம்,உளுந்தூர்பேட்டை தாலுகா,பாலி ஊராட்சியில் தேசிய
கிராமப்புற வேலை உறுதிதிட்டத்தில் நடைபெறும் ஊழல்பற்றி மாலெ கட்சியின் விழுப்புரம் மாவட்ட தோழர்கள்ஆய்வு செய்தனர். நேரடி விசாரணை, தகவல் அறியும் சட்டத்தின் கீழ் (ரூ.2,128 செலுத்தி)பெறப்பட்ட 1064 பக்க விபரங்கள்ஆகியவற்றில் இருந்து பின்வரும் அறிக்கை தரப்படுகிறது.

பாலி ஊராட்சியின் தலைவராக இருப்பவர் அதிமுகவைச்சேர்ந்த திருமதி பழனியம்மாள்.
கடந்த முன்று ஆண்டு காலமாகஇத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டநிதியில் ரூ.1 லட்சம்வரை
ஊராட்சி தலைவரும், ஊராட்சிஉதவியாளரும் கூட்டு கையாடல்செய்துள்ளனர்.

ஊராட்சி மன்றதலைவர் குடும்பத்தினர் மற்றும்உறவினர் எவரும் இத்திட்டத்தின்
கீழ் வேலைக்கு செல்வதில்லை.ஆனால், வேலை அட்டைகளைவைத்துக் கொண்டு வேலைசெய்ததாக பதிவு செய்து கூலிபெறுகின்றனர்.

ஊராட்சி மன்ற உதவியாளரான முருகேசனின் மனைவிதென்னழகி (இவர் சத்துணவு
அமைப்பாளர்), ஊராட்சி மன்றஉதவியாளரின் மைத்துனர்மனைவி யமுனா (இவர் மும்பையில் வசித்து வருகிறார்), மும்பையில் உள்ள ஊராட்சி உதவியாளரின் தங்கையான மகாராணி,ஊராட்சி மன்ற துணைத் தலைவரான சூர்யா, அவரது கணவர்
ஆறுமுகம் (இவர் பெங்களூரில்வசிக்கிறார்) இரண்டு வேலைஅட்டை வைத்துள்ள கண்பார்வை இல்லாத மாரியம்மாள்இரண்டு அட்டையுள்ள கஸ்தூரி,பி.ஏ.படித்து கைரேகை வைத்துகூலி வாங்கியுள்ள வேலுமயில்என வேலை செய்யாமலே கூலி
வாங்கிய கணக்கு காட்டும்25க்கும் மேற்பட்ட அட்டைகள்பாலி ஊராட்சியில் நடைபெறும்
ஊழல்களை, கையாடல்களைபட்டியலிட்டு காட்டுகிறது.

ஏழைவிவசாயத் தொழிலாளர்களுக்கு,கடுமையான வெயிலில் பாடுபட்டு உழைத்த உழைப்புக்குகூலியை 40 ரூபாய், 50 ரூபாய்என குறைத்துக் கொடுத்துமோசடி செய்து, உழைக்காதவர்கள் பெயரில் கணக்கு காட்டிநிதியை கையாடல் செய்கின்றனர். வேலை நடைபெற்று கூலிபட்டுவாடா நடந்து கொண்டுஇருந்தபோதிலும், பாலி ஊராட்சிபற்றிய அரசாங்க கணக்கேட்டில்ஒதுக்கப்பட்ட நிதி ரூ.3 இலட்சம்செலவாகாமலே இருப்பதாக
காட்டப்படுகிறது.
இதில் என்னஊழல் உள்ளது என்பது ஆய்விற்குரியது.தொகுப்பு வீட்டு ஒதுக்கீட்டில், ஊராட்சி தலைவர், துணைத்தலைவர், உறவினர்கள் இலட்சக்கணக்கான ரூபாய்மதிப்புள்ளவீடுகளை முறைகேடாக பெற்றுள்ளார் என்பது மற்றொருஊழல் ஆகும்.

பாலி ஊராட்சியில் இத்திட்டத்தை அமல்படுத்தியது பற்றியஆய்வு அறிக்கை இல்லை.
ஆகஸ்ட் 2009 வரை சமுதாயதணிக்கையும் செய்யப்படவில்லை. கடந்த ஓராண்டு காலமாக அனைத்திந்திய விவசாயத்தொழிலாளர் சங்கம் (அயலா)பல்வேறு மனுக்களை அளித்துள்ளது. போராட்டங்களையும்நடத்தியுள்ளது. ஊழலில் ஈடுபட்டவர்களை தண்டிக்கும் வரைபோராட்டம் தொடரும்.தேசிய கிராமப்புற வேலை உறுதிதிட்டத்தில் ஊழல்: ஓர் ஆய்வு
- வெங்கடேசன்

0 Responses to தேசிய கிராமப்புற வேலை உறுதி திட்டத்தில் ஊழல்: ஓர் ஆய்வு

About Me

1/10, 11வது தெரு,
கருணாநிதி நகர், அயனாவரம்,
சென்னை - 600 023
தொலைபேசி: 95-44-26743384
மின்னஞ்சல்
maleytheepori@yahoo.com

Followers

;
withdraw the false cases on comrade s.kumarasami and other pricol workers ONLINE PETITIONS [2] CLIK HERE
withdraw the false cases on comrade s.kumarasami and other pricol workers ONLINE PETITIONS [2] CLIK HERE