தமிழக சட்டமன்றஇடைத்தேர்தல் முடிவுகளில், எந்த திடீர் திருப்பமும்
இல்லை. எதிர்பார்த்தபடியேதிமுக 3 தொகுதிகளிலும்காங்கிரஸ் 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. மாவீரர், அஞ்சா நெஞ்சர்அழகிரி நேரடிப் பொறுப்
பேற்காத தொண்டாமுத்தூர் தொகுதியில் 77,000என்ற கூடுதலான வாக்குகள்
வித்தியாசம் என்பதுதான்,ஒரே வித்தியாசமான செய்தி.ஆனால், இதற்குப் பிறகும் திமுக அரசு சிறுபான்மை அரசுதான். இனியும்செல்வி ஜெயலலிதா, கருணாநிதி அரசு மைனாரிட்டிஅரசு என்றுதான் சொல்வார்.

திராவிட இயக்கத் தளபதி,பெரியாரின் சிஷ்யப் பிள்ளை என்றெல்லாம் தம்மை
அழைத்துக் கொள்ளும்கருணாநிதி, ஜெயலலிதாவை செல்வி என்று அழைக்க
மாட்டேன் திருமதி என்றுதான் அழைப்பேன் எனக்கொள்கைப் பற்றில் ஊன்றிநிற்பார். தமிழர் பண்பாட்டை நிலைநாட்டிக் கொண்டே இருப்பார். கருணாநிதி
குடும்ப தொழில் சாம்ராஜ்யத்தில் இருந்து வெகு விரைவில் வெளிவர இருக்கும் ‘தரைசிங் சன்’ (உதயசூரியன்ஆங்கில வார ஏடும் இப்படியாக தமிழ்ப் பண்பாட்டைக்காக்கும்.கருணாநிதி தேர்தலில்வெற்றி பெற்றுவிட்டார்.

இலங்கைத் தமிழ் மக்களும்,தமிழ்நாட்டு மக்களும் தான்,தொடர்ந்து தோற்கடிக்கப்
படுகிறார்கள். இலங்கைத்தமிழ் மக்கள் இராஜபக்சேயுடன் சிங்களப் பேரின
வாதத்துடன் அனுசரித்துவாழக் கற்றுக் கொள்ளவேண்டும், அங்கே அமைதியும் சகஜநிலையும் நிலவுகிறது எனத் திருவாரூர் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ கருணாநிதி
அடிகளார் ஞான உபதேசம்நாளும் செய்கிறார். ஆனால்,
சில லட்சம் தமிழ் மக்கள்இன்னமும் வதை முகாம்களில் வாடுகிறார்கள்.
போதாக்குறைக்கு, பெய்தபேய் மழை, அந்த முகாம்களை வாட்டி வதைத்து
விட்டது.என்டிடிவியின் நிதின்கோகலே, ‘சிறீலங்கா -போரிலிருந்து அமைதிக்கு’
என்ற ஒரு நூலை வெளியிட்டுள்ளார். இந்தியாஇலங்கைக்கு தாக்குதல்
ஆயுதங்கள் எவையும் தரவில்லை என வெளியில்சொன்னாலும், எம்.அய். 17ரக ஹெலிகாப்டர்கள் 5தந்ததாகவும், சுகன்யாவகைப்பட்ட ரோந்துக்கப்பல் வழங்கியதாகவும்,
புலிகளைப் போரில் முறியடிக்க, இந்திய உதவி,அபரிமிதமான பங்காற்றியது
எனவும் இலங்கைக் கடற்படைத் தலைமைத் தளபதிஅட்மிரல் வாசந்தா கரனைகோட தமக்குச் சொன்னதாகவும், கோகலே எழுதுகிறார். கோகலேயின் நூல்,
தமிழினத் தலைவரும் அன்னை சோனியாவும் எப்படிஎல்லாம், இலங்கைத் தமிழர்
களைக் கண்ணும் கருத்துமாய்க் காத்தனர் எனக்காட்டுகிறது!

உலக நாடுகள், அதிலும்மூன்றாம் உலக நாடுகள்,அதிலும் குறிப்பாக ஏகாதிபத்திய எதிர்ப்புப் பாரம்பரியம் இன்று வரை கொண்டுள்ள நாடுகள், அய்க்கிய
நாடுகள் கூட்டங்களில் சிறீலங்கா அரசுக்கு ஆதரவானதீர்மானங்களில் வாக்களிக்கின்றனவே என்ற பரவலானஆதங்கம், கணக்கில் கொள்ளத் தக்கதாகும். ஆனால்மற்ற மூன்றாம் உலகநாடுகள், இந்தியாவிற்குள்தமிழ் தேசிய இனம் வாழ்கிறது என்பதையும், தமிழ்தேசிய இனம் தொடர்பானபிரச்சனைகளில் இந்தியா
கரிசனத்துடன்தான் முடிவுஎடுக்கும் எனக்கருதி இந்தியநிலைப்பாட்டிற்கு ஏற்ப
நடந்து கொள்ள வாய்ப்புள்ளது என்பதையும் நாம்காணத் தவறக் கூடாது.
தமிழ் தேசிய இன ஒடுக்குமுறையை எதிர்க்கும் எவரும், கருணாநிதியையும்
காங்கிரசையும் மன்னிக்கமாட்டார்கள். தமிழக அரசுசில தினங்கள் முன்பு, தடை
செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக எழுதினாலோ பேசினாலோ, அக்குற்றவாளிகள் மீது சட்டம்பாயும் என பத்திரிகைகளில்விளம்பரம் வெளியிட்டு
அச்சுறுத்தியுள்ளதை நாம்கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த விசயத்தில்,எதிர்ப்பு, இலக்கு தவறாமல்,முதன்மையாக, இந்தியாவில், தமிழகத்தில் உள்ளஇராஜபக்சே கூட்டாளிகளுக்கு எதிராகவே இருக்கவேண்டும்.
தமிழ்நாட்டுத் தமிழர்களில் விரல்விட்டு எண்ணக்கூடிய சிலர் நானோ கார்
வாங்கி உள்ளனர். ஏகப்பெரும்பான்மைத் தமிழ்மக்கள் கூடிய சீக்கிரம் ஒரு
கிலோ துவரம் பருப்புரூ.100 ஆகிவிடுமே என்றகவலையில் இருக்கிறார்கள்.
பெய்திருக்க வேண்டியபருவ மழை, 50 சதத்திற்கும்மேல் 18 மாவட்டங்களில்
பெய்யவில்லை. வறட்சியின்,பஞ்சத்தின் காலடிச் சத்தம்கேட்கத் துவங்கிவிட்டது.

சென்ற ஆண்டு குறுவைசாகுபடி 19 லட்சத்து 28ஆயிரம் ஹெக்டரில் நடந்தது. இந்த நிதி ஆண்டில் 7லட்சத்து 26 ஆயிரம் ஹெக்டேர் தாண்டாது. அத்தியாவசிய உணவுப் பொருட்கள்பற்றாக்குறையும், விஷம்போன்ற விலை உயர்வும்தமிழக மக்களைத் துரத்துகின்றன. துரத்தும். பால்விலை உயர்ந்து விட்டது.கருணாநிதி என்ன தீர்வு
சொல்கிறார்? மழை பெய்யாத மாவட்டங்களில்,99776 பம்ப் செட் வைத்துள்ளவர்களுக்கு, செப்டம்பர்30 வரை ரூ.15 கோடி மான்யம், ஒரு லிட்டர் டீசலுக்குரூ.15, ஒரு ஹெக்டேருக்குரூ.1000 மான்யம் என அறிவித்துள்ளார். இது போதாது.பம்ப் செட் இல்லாதவர்களுக்கு, விவசாயத் தொழிலாளர்களுக்கு, கிராமப்புற,
நகர்ப்புற அன்றாடங் காய்ச்சிகளுக்கு என்ன நிவாரணம்? இடைத்தேர்தல்
வெற்றிதான் காணிக்கை.

ஜெயலலிதா, மக்கள்தம்மைப் புறக்கணிப்பார்கள்என்ற அச்சத்தில், இடைத்
தேர்தல்களைப் புறக்கணித்து விட்டார். ராமதாசுவும்வைகோவும் பின்தொடர்ந்தனர். தமிழக மக்களின்சுட்டெரிக்கும் வாழ்க்கைப்பிரச்சனைகளில் இருந்துஒதுங்கி, கொட நாட்டின்இதமான குளிரில் ஓய்வெடுக்க அம்மையார் சென்றுவிட்டார்.
வலுவான எதிராளிகள் தேர்தல் ஆட்டக்களத்தில் இல்லை என்றாலும், திமுக தரப்பினர்
அவர்களது வழக்கமானஎல்லா தயாரிப்புகளுடனும்,அசத்த முடியுமா என,முயன்றனர். ஆனபோதும்,பதிவான 100 வாக்குகளில்22அய் விஜய்காந்த் பெற்றுள்ளார். திமுக அரசு எதிர்ப்புக்கு, களமும், வெளியும்,வாய்ப்பும் நிச்சயம் உள்ளன.
கருணாநிதியின் நல நடவடிக்கைகளுக்கு எல்லைஉள்ளது. அவர் மக்களுக்கு
கிள்ளித் தந்துவிட்டு, வசதிபடைத்தவர்களுக்கு அள்ளித் தருவது, தமிழக மக்களுக்கு நன்றாகவே புரிகிறது.சட்டமன்ற உறுப்பினர்களுக்கான சம்பள உயர்வும், வீடு
கட்ட நிலம் வழங்கும் அறிவிப்பும், இவை நடைபெற்றவிதமும் சூழலும், தமிழக
மக்களைக் கொதிப்படையவைத்துள்ளது.
இடதுசாரிக் கட்சிகள் 4தொகுதிகளில் பெற்ற வாக்குகளில் இருந்து, இடதுசாரி
அரசியலுக்கு, பாதைக்கு,கொள்கைகளுக்கு ஆதரவுஇல்லை என்ற முடிவுக்கு
விவரம் அறிந்த எவரும்செல்ல முடியாது. தமிழகத்தில், நீண்டகாலமாக, இகக
மற்றும் இகக(மா), சொந்தக்காலில் நின்று சுதந்திரமாக
மக்கள் நலன்களுக்காகப்போராடும் அரசியல் சக்தியாகச் செயல்படவில்லை.
கிட்டத்தட்ட சொந்தஅடையாளத்தைத் தொலைத்து விட்டார்கள். இந்த
முறையும் கூட, தனித்துப்போட்டியிட்டது, ஒரு சுதந்திரமான திட்டமிட்ட அரசியல் தேர்வல்ல. வேறு வழிஇல்லாமல் செய்தது. (சர்ற் க்ஷஹ்ஸ்ரீட்ர்ண்ஸ்ரீங், க்ஷன்ற் க்ஷஹ் ஸ்ரீட்ஹய்ஸ்ரீங்.)ஜெயலலிதாவின் புறக்கணிப்பு முடிவோடு தாம் நிற்கவில்லை என்றசமிக்ஞை,திமுகவுக்கு தரப்பட்டது.
கருணாநிதி, தேர்தலில் எவ்வளவு இடங்களில் வெற்றிஎன்பதைக் காட்டிலும்,
மக்கள் பெருமளவிற்குவாக்களித்ததே, தமக்குமனநிறைவு தருவதாகச்சொன்னார். இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சி புறக்கணிப்பை மக்கள் ஏற்கவில்லை என்றது. மார்க்சிஸ்ட் கட்சியின் தோழர் வரதராஜன், ஜனநாயக உணர்வுள்ள வாக்காளர்கள் புறக்கணிப்பை ஏற்கவில்லை என்கிறார்.
கருணாநிதி மட்டுமல்ல, அவரது முன்னாள்(நாளைய?) தோழர்களும்,
தேர்தல் ஜனநாயகம் வென்றதில் மட்டற்ற மகிழ்ச்சிஅடைந்துள்ளனர். ஆனால்
மறுநாளே, மார்க்சிஸ்ட்கட்சி, அஇஅதிமுகவுடன்தனது கூட்டணி தொடர்வதாகச் சொல்கிறது. இவற்றில்அரசியல் சுதந்திரத்திற்குமாறாக, அரசியல் திரிசங்கு
நிலையையே காண முடிகிறது. (அவர்கள் சேர்ந்து நிற்கும் இடம் சொர்க்கம்.
எதிர்க்குமிடம் நரகம்.)
தமிழகத்தின் முதன்மையான முதலாளித்துவ குலாக்கட்சியை எதிர்த்துப் போராட, அப்படி ஒரு பாவனைசெய்யக் கூட, முதன்மையான முதலாளித்துவ எதிர்க்கட்சி தயாரில்லை. விஜய்காந்த் குட்டி கழகம் நடத்துபவர். அதற்கேற்ப காங்கிரஸ் உறவுக்கு பச்சைக்கொடிகாட்டியுள்ளார்.
ஆக, வாய்ப்புக்களும் களங்களும். வா,வா, தலைமையேற்க வாஎனப் போராடும் இடதுசாரிகளை அழைக்கின்றன.
வரலாறு விடுத்துள்ளஅறைகூவல் ஏற்க உண்மையான கம்யூனிஸ்ட்கள் தயாராவோம். மக்கள் பிரச்சனைகள் மீதான, மக்கள் சீற்றத்தை,போராட்டங்களை, துணிந்து
வழி நடத்துவோம்

0 Responses to மக்களின் சீற்றத்தை, போராட்டங்களை, துணிந்து வழி நடத்துவோம்!

About Me

1/10, 11வது தெரு,
கருணாநிதி நகர், அயனாவரம்,
சென்னை - 600 023
தொலைபேசி: 95-44-26743384
மின்னஞ்சல்
maleytheepori@yahoo.com

Followers

;
withdraw the false cases on comrade s.kumarasami and other pricol workers ONLINE PETITIONS [2] CLIK HERE
withdraw the false cases on comrade s.kumarasami and other pricol workers ONLINE PETITIONS [2] CLIK HERE