2008 ஆகஸ்ட் 16 அன்றுமயிலம் ஒன்றியம் ரெட்டணைகிராமத்தில், தேசிய கிராமப்புற
வேலை உறுதி திட்டத்தில்வேலை செய்த சுமார் 1000 விவசாயத் தொழிலாளர்கள், (அதிகமானோர் பெண் விவசாயத் தொழிலாளர்கள்) கூலி குறைக்கப்பட்டு
மோசடி நடப்பதற்கு எதிராகசட்டக் கூலி ரூ.80 கோரி மார்க்சிஸ்ட் கட்சியின் விவசாயத்தொழிலாளர் சங்கம் சார்பாகசாலை மறியல் செய்தபோது,திமுக அரசாங்கம் அதிரடிப்படையை ஏவியது. துப்பாக்கி சூடுநடத்தியது. நீதி விசாரணைநடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்ட ஈடு வழங்குவதாகவும், சட்டக் கூலி கோரிக்கைநிறைவேற்றப்படும் எனவும்வாக்குறுதி வழங்கியது.

அனைத்திந்திய விவசாயத்தொழிலாளர் சங்க குழு ஆகஸ்ட்18 அன்று ரெட்டணைக்கு
சென்று நிலைமைகளை கண்டறிந்தது. துப்பாக்கி சூட்டைகண்டித்தும், திமுக அரசாங்கத்தின் விவசாயத் தொழிலாளர்,கிராமப்புற ஏழைகள் மீதானமக்கள் விரோத போக்கைகண்டித்தும் சென்னையில் 26.08.2008 அன்று ஆர்ப்பாட்டம்கட்டமைத்தது.

ரெட்டணை துப்பாக்கி சூடுநடந்து ஓராண்டு நிறைவடைந்துவிட்டது. தற்போதைய நிலைமையை பரிசீலிப்பதற்கு அயலாமற்றும் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்கட்சியின் உண்மையறியும் குழுஆகஸ்ட் 18 அன்று ரெட்டணைக்கு சென்றது. கட்சி மாவட்ட
பொறுப்பாளர் வெங்கடேசன்,அயலா மாவட்ட செயலாளர்தட்சிணாமூர்த்தி, ஏஅய்சிசிடியு
பொறுப்பாளர் பொன்.கிருஷ்ணமூர்த்தி, அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகமாவட்டதலைவர் அஞ்சுகம், முன்னணித்தோழர்கள் பஞ்சவர்ணம், சுசீலாஆகியோர் குழுவில் பங்கேற்றனர். மிகவும் பிற்படுத்தப்பட்ட,தலித் மற்றும் பழங்குடியைச்
சேர்ந்த விவசாயத் தொழிலாளர்கள் சுமார் 100 பேரை,தடியடியால் பாதிக்கப்பட்டவர்
களை, சந்தித்தது. அவர்கள்சொன்ன சிலக் கருத்துக்கள்:

நீங்கள் (உண்மையறியும்குழு) வந்த பிறகுதான் எங்களுக்கு துப்பாக்கி சூடு நடந்து
ஓராண்டு ஆனதே நினைவுக்குவருகிறது. மார்க்சிஸ்ட் கட்சியும்சங்கமும்ரெட்டணையை மறந்துவிட்டன. திமுக அரசாங்கம்வாக்குறுதிகளை மறந்துவிட்டது.

நீதி விசாரணை என்ற பெயரில் இரண்டு நாட்கள் விசாரித்தார்கள். பிறகு கிடப்பில் போட்டுவிட்டனர். நீதி விசாரணைஅறிக்கை வெளியிடப்பட்டதாக
தெரியவில்லை.

தடியடி துப்பாக்கிச் சூட்டில்பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை தரப்பட்டதுடன் முடிந்துவிட்டது. எவ்வித நிவாரணமும்வழங்கப்படவில்லை.
இப்போது, தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டஅமலாக்கம் பொறுத்தவரை,
சட்டக் கூலி ரூ.80 இதுவரைவழங்கப்படவில்லை. ரூ.60 முதல்ரூ.70 வரைதான்வழங்கப்படுகிறது. யாருக்கும் 100 நாள் வேலைவழங்கப்படவில்லை.

வேலைதரப்படாத நாட்களுக்கு பாதிசம்பளம் வழங்கப்படவில்லை. 1வார்டுக்கு 5 நாட்கள் வேலைஎன்ற முறையில் 5 வார்டுகளுக்கு சுழற்சி முறையில் வேலைவழங்கப்படுகிறது. அதாவதுவேலை செய்த தொழிலாளி ஒருவர் மீண்டும் 5 வாரங்கள் கழித்துதான் வேலை பெறமுடிகிறது.மார்க்சிஸ்ட் கட்சி சார்பான விவசாயத் தொழிலாளர் சங்கம்செயல் இழந்துவிட்டது.

5 மாதங்களுக்கு முன்னர்,கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களுக்கும், பொது மக்களுக்கும்
இடையில் மோதல் நடைபெற்றது. மீண்டும் ஒரு தடியடி.கள்ளச்சாராயத்தைபோலீசாரும்,
மாவட்ட நிர்வாகமும் தடுக்கமுடியவில்லை. மக்களுடையஅடிப்படைத் தேவைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

துப்பாக்கி சூட்டை நடத்திய திமுக அரசாங்கம், உழைப்பிற்கேற்ற ஊதியம் உழைத்தால்தான் சாத்தியம் என்ற துணைமுதல்வர் மு.க.ஸ்டாலின் போன்றவர்கள் ரெட்டணையை மறந்துவிடுவது இயல்பானதுதான்.ஆனால், இடதுசாரிகள் தாங்கள்
நடத்திய போராட்டத்தை, மக்கள்கோரிக்கைகளை மறந்ததுதான்,நினைவு கூர்வதைகூட மறந்துவிட்டதுதான் மிகவும் வருத்தத்திற்குரியது. அரசியல் சித்துவேலைகளில், தேர்தல் கூட்டணிகளில் மூழ்கிப்போனவர்களுக்கு,அடிப்படைக் கடமைகள், கம்யூனிஸ்ட் கட்சியின் வர்க்க கடமைநினைவுக்கு வருமா என்ற சிந்தனையுடன் உண்மையறியும் குழு,பெண்கள் மற்றும் இளைஞர்கள்மத்தியில் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு, ரெட்டணைமக்களோடு தோள் கொடுப்போம்என ஒருமைப்பாடு தெரிவித்தது

0 Responses to ரெட்டணை விவசாயத் தொழிலாளர்களின் கோரிக்கைகளும் திமுக அரசாங்கத்தின் நிறைவேறாத வாக்குறுதிகளும்

About Me

1/10, 11வது தெரு,
கருணாநிதி நகர், அயனாவரம்,
சென்னை - 600 023
தொலைபேசி: 95-44-26743384
மின்னஞ்சல்
maleytheepori@yahoo.com

Followers

;
withdraw the false cases on comrade s.kumarasami and other pricol workers ONLINE PETITIONS [2] CLIK HERE
withdraw the false cases on comrade s.kumarasami and other pricol workers ONLINE PETITIONS [2] CLIK HERE